»   »  விறு விறு வேதிகா

விறு விறு வேதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

முனி சுமாராக ஓடிவிட்டதால் அதில் நடித்த வேதிகாவும் கொஞ்சம் போல தெம்பாகி விட்டார். அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அசத்திப்புடணும் என்று அலாதி ஆர்வத்துடன் உள்ளார்.

முனி படத்தில் ராகவ லாரன்ஸில் ேஜாடியாக வந்து போன ஒல்லிக்குச்சி இடுப்புக்காரிதான் வேதிகா. வேண்டிய விஷயங்கள் ேபாதுமான அளவுக்கு, போஷாக்காக இருப்பதால் வேதிகாவுக்கு கோலிவுட்டில் டிமாண்ட் கூடியுள்ளதாம்.

அத்தோடு முனி சுமாராக ஓடி விட்டதால் ேவதிகா ராசியான நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்ேபாது பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக அறிமுகமாகும் சக்கரக்கட்டி படத்தில் வேதிகாவும் இருக்கிறார்.

இப்படத்தின் மூலம் ேகாலிவுட்டில் ஹிட நாயகிகள் வரிசையில் தனக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் வேதிகா.

வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்த வேண்டும். கிளாமர், நடிப்பு, குணச்சித்திரம் என விதம் விதமாக கலக்க வேண்டும். கோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என வெறியாக உள்ளாராம் வேதிகா.

இதற்காக திட்டமிட்டு காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளாராம். புதிதாக ஒரு ஆல்பத்தை எடுத்து பி.ஆர்.ஓ.க்கள் மூலமாக உலா விட்டுள்ளாராம். அதில் வியர்க்க வைக்கும் வகையில் வேதிகாவின் படங்கள் படு ஜூடாக உள்ளதாம்.

முனி படத்தில் தான் நடித்த காெமடியை ரசிகர்கள் ரசித்துப் பார்த்ததால், தொடர்ந்து காெமடி பிளஸ் நடிப்பை தொடர இருக்கிறாராம் வேதிகா.

ஆனால் ஒரு விஷயத்தில் ேவதிகா படு உறுதியாக இருக்கிறார். அதாவது, வம்படியாக கிளாமரில் நடிக்க மாட்டாராம். அதேசமயம் கிளாமர் வேண்டாம் என்று கூறவும் மாட்டாராம். அதாவது எதது வேண்டுமோ, அததை அப்பப்ப தருவாராம்.

ஜோதிகா, பூமிகா அளவுக்கு இல்லாவிட்டாலும், இவர் ஒரு ஜாதிகாவாகத்தான் தெரிகிறார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil