twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னட கற்கண்டு வேதிகா

    By Staff
    |

    புதுப் புது டிரெண்டுகளும், மாடர்ன் டெக்னாலஜியின் மேஜிக்கும் தமிழ் சினிமாவையும், சினிமாக்காரர்களையும் புரட்டிப் போட்டுக் கொண்டுள்ள நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்து எம்.ஜி.ஆர். படங்கள் பட்டையைக் கிளப்பி ஒரிஜினல் வசூல் ராஜா, வாத்தியார்தான் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளன.

    முனி வேதிகா மும்பைக்காரப் பெண் இல்லையாம். தித்திக்கும் கன்னடத்துக் கற்கண்டாம்.

    நடித்தது ரெண்டு படம். ஆனாலும் வேதிகாவின் கால்ஷீட்டுக்காக தவம் இருக்க ஆரம்பித்துள்ளனர் கோலிவுட் தயாரிப்பாளர்கள். அந்த அளவுக்கு படு டிமாண்டில் இருக்கிறார் வேதிகா.

    பார்க்க விறு விறுப்பாக இருக்கிறாரே, மும்பைக்கார அழகுப் பொம்மையாக இருப்பாரோ என்று விசாரித்தால், பாப்பா கன்னடத்து கற்கண்டு என்று தெரிய வந்தது. ஆனால் பிறந்தது, வளர்ந்தது மும்பையில்தானாம், பூர்வீகம் மட்டும் கர்நாடகாவாம்.

    அர்ஜூனின் மதராஸி படத்துக்காக ஆள் தேடிக் கொண்டிருந்தபோது எதேச்சையாக ஒரு இந்தி ஆல்பத்தைப் பார்த்து அதில் நடித்திருந்த வேதிகாவைப் புக் பண்ணினார்களாம். அந்த வகையில், மதராஸிதான் வேதிகாவுக்கு முதல் படம். அப்புறம்தான் முனி நாயகியானார்.

    முனியில் அவரது கிளாமரைப் பார்த்து சிலிர்த்துப் போய்தான் சிம்பு தனது காளை படத்தில் புக் பண்ணியுள்ளார். அதேபோல பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக அறிமுகமாகும் சக்கரக்கட்டி படத்திலும் வேதிகாவை புக் பண்ணியுள்ளனராம்.

    இளமைத் துள்ளலுடன் கூடிய காமெடி கலந்த கேரக்டராம் இது. காளை, சக்கரக்கட்டி ஆகிய இரு படங்களிலும் வேதிகா இரண்டாவது ஹீரோயின்தான். இருந்தாலும் தனது பாணி நடிப்பைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.

    வேதிகாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறதாம். அதாவது பார்ட்டி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என சாயங்கால நேரங்களில் அலையும் பழக்கம் வேதிகாவுக்குக் கிடையாதாம். இதனால் அவரை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இதுவரை வேதிகாவால் எந்த வேதனையும் ஏற்பட்டதில்லையாம்.

    சமர்த்துக் கட்டி!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X