twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ் வீட்டில் கிரிக்கெட் விளையாட சென்ற வெற்றிமாறன் அங்கு பார்த்த ஒரு சிறுவன் இப்போது யார் தெரியுமா

    |

    சென்னை: இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக நடித்திருக்கும் படம் தான் திருச்சிற்றம்பலம்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

    சின்ன படங்கள்.. நம்மள நம்பித்தான் வருது.. ஓய்வெடுக்காமல் உழைத்த கெளசிக்.. பிக் பாஸ் அபிஷேக் உருக்கம்சின்ன படங்கள்.. நம்மள நம்பித்தான் வருது.. ஓய்வெடுக்காமல் உழைத்த கெளசிக்.. பிக் பாஸ் அபிஷேக் உருக்கம்

    சிறு வயதிலேயே சாதனை

    சிறு வயதிலேயே சாதனை

    ஐஸ்வர்யா தனுஷின் மாமன் மகன் தான் அனிருத். அனிருத்தின் தந்தையும் ஒரு நடிகர் என்பது ஊரறிந்த விஷயம். சிறு வயதிலிருந்தே ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை கேட்டு வளர்ந்த அனிருத்திற்கு இசை மீது தீவிர ஆர்வம் இருந்ததாம். அதனால்தான் இளம் வயதிலேயே இசையமைப்பாளராகி தற்சமயம் அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கும் இசையமைத்து விட்டார்.

    தனுஷ் மட்டுமே நம்பினார்

    தனுஷ் மட்டுமே நம்பினார்

    ஐஸ்வர்யா தனுஷ் முதன் முதலாக 3 படத்தை இயக்க முடிவெடுத்தபோது ரஜினிகாந்த் மகள் இயக்க கமல்ஹாசன் மகள் அதில் ஹீரோயினாக நடித்தால் படத்திற்கு புரமோஷனாக இருக்கும் என்று முதலில் ஸ்ருதி ஹாசனை நடிக்க கேட்டாராம். ஆனால் கால் ஷீட் பிரச்சினை காரணமாக முதலில் நடிக்க முடியவில்லை என்று ஷ்ருதி கூற, அமலா பால் கதாநாயகியாக தேர்வானார். பின்னர் ஸ்ருதி ஹாசனின் கால்ஷீட் கிடைக்கவே அமலா பாலிடம் சுமூகமாக பேசி வேறு படத்தில் நடிக்க வைக்கிறோம் என்று கூறி மீண்டும் சுருதி ஹாசனை படத்தில் ஒப்பந்தம் செய்தனர். சொன்ன வார்த்தையை காப்பாற்றுவதற்காகவே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அமலா பாலிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் தனுஷ். இதேபோல ஐஸ்வர்யா தனக்கு பிடித்த இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுடன் முதல் படத்தில் பணி புரிய வேண்டும் என்று விருப்பப்பட்டாராம். ஆனால் அனிருத் மீது ஐஸ்வர்யாவை விட அதிக நம்பிக்கை வைத்திருந்த தனுஷ் அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம் என்று '3' படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள். அதன் பிறகு நடந்தது அனைவருக்குமே தெரியும்.

    கருத்து வேறுபாடு

    கருத்து வேறுபாடு

    3 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பல படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்தனர். டி.என்.ஏ என்று அவர்கள் கூட்டணிக்கு பெயரும் வந்தது. இந்நிலையில்தான் திடீரென்று தனுஷ் முதன் முதலாக இயக்குநரான படத்திற்கு அனிருத்திற்கு பதிலாக ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக பல ஆண்டுகள் பேசப்பட்டது. பீப் சாங் பாடல் சர்ச்சையில் தனுஷ் அட்வைஸ் செய்ததால்தான் அனிருத் விலகிச் சென்றார் என்றும் தன்னை விட சிவகார்த்திகேயன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்ததால் தான் இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் பல்வேறு புரளிகள் வலம் வந்தன. இந்நிலையில் தான் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.

    வெற்றிமாறன் விளையாட்டுப் பேச்சு

    வெற்றிமாறன் விளையாட்டுப் பேச்சு

    சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிமாறன் மற்றும் இன்னும் சிலர் தனுஷின் வீட்டிற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வார்களாம். அப்போது ஒரு பையன் டங்கு டங்கு என்று கீபோர்டை வாசிக்கும் சத்தம் கேட்குமாம். இந்தப் பையன் மிகப்பெரிய இசை அறிவு உள்ளவன் எதிர்காலத்தில் மியூசிக் சென்சேஷன் ஆவான் பாருங்கள் என்று தனுஷ் கூறுவாராம். அவர்தான் இப்போது அனிருத்தாக இருக்கிறார் ஒரு திறமையை அடையாளம் காணுவதில் தனுஷ் கில்லாடி என்று வெற்றிமாறன் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

    English summary
    Vetrimaran went to play cricket at Dhanush's house and saw a boy there. Now who is he?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X