»   »  கேன்ஸில் வெயில்

கேன்ஸில் வெயில்

Subscribe to Oneindia Tamil

ஷங்கர் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பாவனா, பசுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வெயில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் 60வது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலை சிறந்த படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வெயில், பள்ளிக்கூடம் உள்ளிட்ட 7 படங்கள் கேன்ஸ் போயுள்ளன. விழாவில் முதல் இரண்டு நாட்களில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

முதல் நாளன்று தமிழிலிருந்து சென்றுள்ள வெயில், மலையாளத்திலிருந்து வந்துள்ள சாய்ரா, லகே ரஹோ முன்னாபாய், மிஸ்டு கால் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.

இப்படங்களின் இயக்குநர்களான வசந்த பாலன் உள்ளிட்டோர் மேடைக்கு வரவழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு கெளவரப்படுத்தப்பட்டனர்.

டி மாண்டி திரையரங்கில் சப் டைட்டிலுடன் திரையிடப்பட்ட வெயில் படத்தை வெளிநாட்டு பார்வையாளர்களும், திரையுலகினரும், பத்திரிக்கையாளர்களும் ரசித்துப் பார்த்தனர்.

கேன்ஸ் திரை விழாவையொட்டி இந்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இயக்குநர்கள் மணிரத்தினம், கேத்தன் மேத்தா, நடிகைகள் மணீஷா கொய்ராலா, ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட இந்தியத் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil