»   »  பா.விஜய் நூல்கள்-கருணாநிதி வெளியிடுகிறார்

பா.விஜய் நூல்கள்-கருணாநிதி வெளியிடுகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவிஞர் பா.விஜய் எழுதியுள்ள 10 கவிதை தொகுப்பு நூல்களை முதல்வர் கருணாநிதி வருகிற மே 6ம் தேதி வெளியிடுகிறார்.

கவிஞர் பா.விஜய், தான் எழுதிய கவிதைத் திருவிழா என்ற பெயரில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். மேலும் அந்த விழாவின்போது வித்தகக் கவிஞன் என்ற பட்டத்தையும் அளித்தார்.

இந்த நிலையில் மேலும் 10 கவிதைத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார் விஜய். இந்த நூல்களையும் முதல்வர் கருணாநிதியே வெளியிடுகிறார்.

மே 6ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த நூல்களை வெளியிடுகிறார். போர் புறா, வாழ்க்கை தேடும் வானம்பாடிகள், அரண்மனை ரகசியம், அடுத்த அக்னிப் பிரவேசம், கைத்தட்டல் ஞாபகங்கள், காகித மரங்கள், பெண்கள் பண்டிகை, ஐஸ்கட்டி அழகி, காதல் மற்றும் காதலிகள் தாக்கம், கடவுள் வருகிறான் ஜாக்கிரதை, இரண்டடுக்கு ஆகாயம் என் இந்த நூல்களுக்குப் பெயரிட்டுள்ளார் விஜய்.

நிகழ்ச்சியில் வாலி, அப்துல் ரகுமான், மு.மேத்தா ஆகியோர் நூல்களை பெற்றுக் கொள்கிறார்கள். இயக்குநர் கே.பாக்யராஜ், சாலமன் பாப்பையா, நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்த விழாவின்போது விஜய்யின் சொந்த ஊரான உட்கோட்டை கிராமத்தில் நூலகம் அமைப்பதற்காக ரூ. 5 லட்சம் நிதியும் வழங்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil