»   »  விஜய்க்கு கமல் பாராட்டு!

விஜய்க்கு கமல் பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

போக்கிரி படத்தின் 175வது நாள் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு விஜய்யை வாழ்த்திப் பேசினார்.

விஜய் நடித்த போக்கிரி படத்தின் 175வது நாள் விழா சென்னையில் நடந்தது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நேரு ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் இயக்குநர் கே.பாலச்சந்தர், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பாலச்சந்தர் விஜய் உள்ளிட்ட கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.

கமல்ஹாசன் பேசுகையில், விஜய்யின் கடுமையான உழைப்பைப் பாராட்டிப் பேசினார். சத்யராஜ் பேசுகையில் சினிமாவைத் தாண்டி அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் விஜய் வெற்றி பெற வாழ்த்தினார்.

வெற்றி விழாவின் ஒரு பகுதியாக நமீதா, சாயாசிங், கிரண், தேஜாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்ட கலக்கல் கலை நிகழ்ச்சியும் நடந்தது. குத்துப் பாட்டுக்களுக்கு நான்கு பேரும் நச்சென்று ஆட்டம் போட்டு அரங்கத்தை அதிர வைத்தனர்.

விஜய்யும், தாம்தக்க தையத்தக்க கூத்து பாடலுக்கு ஆட்டம் போட்டார். அவருடன் ராகவா லாரன்ஸ் நடத்தும் நடனப் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற மாணவர்களும் ஆடியது விசேஷமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரரின் மதுரம் இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் மற்றும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil