»   »  விஜய், ஷங்கருக்கு டாக்டர் பட்டம்

விஜய், ஷங்கருக்கு டாக்டர் பட்டம்

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழம் முடிவு செய்துள்ளது.

சென்னை மதுரவாயலில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் உள்ளது. இது ஒரு நிகர் நிலைப் பல்கலைக்கழகமாகும். முன்னாள் அதிமுக எம்.பியும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் இதை நடத்தி வருகிறார்.

இந்த பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் அனில் கோஹ்லி ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

திரைப்படத் துறையில் சாதனை படைத்ததற்காகவும், ஏழைகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருவதற்காகவும் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

தரமான படங்களை, ஹாலிவுட் தரத்திற்கு இயக்கி தமிழ் சினிமாவுக்கு புதிய கெளரவம் தேடித் தந்ததற்காக ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறதாம்.

மதுரவாயலில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 27ம் தேதி பிற்பகல் 3.30மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பட்டங்களை வழங்கிப் பேசுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil