ஏழை குழந்தைகளின் படிப்பில் அக்கறை காட்டிய விஜய், சிம்பு... ராகவா லாரன்ஸ் சொன்ன தகவல்!

சென்னை : நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்

தமிழில் இப்பொழுது முழுவீச்சில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கலக்கி கொண்டுள்ளார்

இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய ராகவா லாரன்ஸ் விஜய் மற்றும் சிம்பு ஏழை குழந்தைகளை படிக்க வைக்க மாறி மாறி உதவி செய்தார்கள் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

காஞ்சனா

காஞ்சனா

குரூப் டான்ஸராக திரைத்துறையில் வாழ்க்கையை தொடங்கிய ராகவா லாரன்ஸ் இப்பொழுது தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டு உள்ளார் ராகவா லாரன்ஸ் முனி திரைப்படம் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது முனி கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் காஞ்சனா என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்

ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்

நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டுள்ள ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு ஆசிரமம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய ஏணிப்படியாக இருந்து வரும் ராகவா லாரன்ஸ் இப்பொழுது படங்களில் முழுவீச்சில் ஹீரோவாக நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்.சந்திரமுகி 2, ருத்ரன் என அடுத்தடுத்த படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ் ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதற்காக விஜய் மற்றும் சிம்பு மாறி மாறி உதவி செய்தது குறித்து மேடையில் பகிர்ந்துள்ளார்

சிம்பு ஏழைக் குழந்தைகளின் படிப்பு

சிம்பு ஏழைக் குழந்தைகளின் படிப்பு

Do somthing மூலம் ஸ்லம் ஏழை குழந்தைகளை படிக்க வைக்க முடிவு செய்த ராகவா லாரன்ஸ் அதற்காக திரைப்பிரபலங்கள் இடம் மெயில் மூலம் உதவி கேட்டுள்ளார் அதன் காரணமாக சிம்பு ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தாராம். இந்த தகவல் எப்படியோ விஜய் காதுக்கு செல்ல விஜய் ராகவா லாரன்ஸுக்கு போன் செய்து என்ன நண்பா எல்லார்கிட்டயும் கேக்குறீங்க நம்ம கிட்ட கேக்க மாட்டீங்களா.. Do somthing னு ஸ்லம் குழந்தைகளை எல்லாம் எடுத்து படிக்க வெக்கிறரிங்கலாமே

அக்கறை காட்டிய விஜய்

அக்கறை காட்டிய விஜய்

அது எனக்கு வெளியாள் சொல்லித்தான் தெரியும் ஏன் நீங்க கேட்டா நான் கொடுக்க மாட்டேனா என ராகவா லாரன்ஸை தொலைபேசியில் அழைத்து பேசி ஏழை குழந்தைகளின் படிப்பு செலவிற்காக விஜய் அப்போதே ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்தாராம். சிம்புவை தொடர்ந்து விஜய்யும் do somthing மூலமாக ஏழைக் குழந்தைகளுக்கு கேட்காமலேயே ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்த தகவலை ராகவா லாரன்ஸ் விழா மேடை ஒன்றில் யாரும் அறிந்திராத இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X