Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மனைவியுடன் தங்கியதால் ஏற்பட்ட பிரச்சனை.. விஜய் பட நடிகருக்கு பறிபோன பாரதிராஜா பட வாய்ப்பு!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "கிழக்குச் சீமையிலே" திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் விஜயகுமார், ராதிகா, நெப்போலியன், விக்னேஷ், அஸ்வினி உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.
ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் தேர்வான நடிகர் நடிகைகள் இவர்கள் இல்லை என்பதனை பத்திரிகையாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் கூறி இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
கமல் நடித்த ’ஒரு கைதியின் டைரி’ ரீமேக்கில் அஜித்?..மனோஜ் பாரதிராஜாவின் ஆசை

வடிவுக்கரசி பாரதிராஜாவிடம் பெற்ற ஆசிர்வாதம்
"கிழக்குச் சீமையிலே" படம் பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஒட்டன்சத்திரம் வந்த நடிகை 'வடிவுக்கரசி' அன்று அவருடைய பிறந்தநாள் என்பதினால் படம்பிடிப்பு தளத்திற்கு போன உடனே பாரதிராஜா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதோடு இந்த திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக பாரதிராஜாவிடம் கூறி இருக்கிறார், அவர் உங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிற மாதிரியான ஒரு காட்சி கூட இந்த திரைப்படத்தில் இல்லை என்று கூறிய உடன் மிகுந்த வருத்தத்தில் அங்கிருந்து சென்று இருக்கிறார் வடிவக்கரசி.

முதல் முதலில் தேர்வான நடிகர் நடிகை
விஜயகுமாரின் மகனாக நடிகர் விக்னேஷும் அவருக்கு ஜோடியாக ராதிகாவின் மகளாக 'அஸ்வினி' என்ற பெண்ணும் நடித்திருப்பார்கள். ஆனால் முதலில் தேர்வானவர்கள் அவர்கள் கிடையாது, விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரேம்குமார். இவர் இப்பொழுது விஜய், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் பெண்ணோடு இருந்ததால் ஏற்பட்ட பிரச்சினை
நடிகர் பிரேம்குமார் முதல் நாள் படப்பிடிப்பில் ராதிகாயுடன் நடந்த காட்சிகளும் இரண்டாம் நாள் நடிகையுடன் காதல் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டன. இப்படி மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு பாரதிராஜா அவரை வரச்சொல்லிய போது தான் தெரிந்தது ஒட்டன்சத்திரத்தில் அவர் இல்லை என்றும், அவர் முன் இரவு ஒரு பெண்ணோடு தங்கி இருந்தார் என்ற தகவல் உதவி தயாரிப்பாளர் இடமிருந்து பாரதிராஜாவுக்கு தெரியவந்தது.

திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட பிரேம்குமார்
மிகுந்த கோபம் அடைந்த இயக்குநர் பாரதிராஜா நடிகர் பிரேம்குமாரை அந்த படிப்பிடிப்பு தளத்தில் இருந்து போக சொன்னது மட்டும் இல்லாமல் திரைப்படத்திலிருந்து முழுமையாக நீக்கி உள்ளார். ஆனால் பிரேம் குமார் உடன் தங்கியிருந்த பெண் அவருடைய மனைவி தான் என்பது பல முறை இயக்குநர் பாரதிராஜாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக நடிகர் விக்னேஷ் அந்த கதப்பாத்திரத்தில் நடித்தார். அப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.