»   »  பிரியதர்ஷன் படத்தில் விஜய்!

பிரியதர்ஷன் படத்தில் விஜய்!

Subscribe to Oneindia Tamil


பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை, சிஷ்யனும், கிரீடம் படத்தின் இயக்குநருமான ஏ.எல். விஜய் இயக்குகிறார்.

மலையாளத்தில் ஏராளமான படங்களை இயக்கியுள்ள பிரியதர்ஷன் தமிழிலும் பல படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தமிழில் ஒரு படம் தயாரிக்கவுள்ளார் பிரியதர்ஷன். யுடிவி நிறுவனமும் தயாரிப்பில் கை கோர்க்கிறது.

இப்படத்தை இயக்குவது ஏ.எல்.விஜய். பிரபல தயாரிப்பாளரான ஏ.எல். அழகப்பனின் மகனான விஜய், பிரியனிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருந்தார். அவரது மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் உதவியாளராக இருந்த விஜய், விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அஜீத் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தை இயக்கி தமிழில் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமானார். இந்த நிலையில் தனது குருவின் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கும் வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்துள்ளது.

அக்டோபர் 15ம் தேதி இந்தப் படத்திற்குப் பூஜை போடப்படவுள்ளது. கிரீடம் படம் திரையிடப்பட்டபோது, தனது பேனரில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு தருவதாக விஜய்யிடம் கூறியிருந்தார் பிரியன். தற்போது அதை நிறைவேற்றியுள்ளார்.

பிருத்விராஜ் மற்றும் பழம்பெரும் மலையாள நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். மலையாள பின்னணிப் பாடகர் எம்.ஜி.சுகுமார், இப்படத்துக்கு இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுதான். செல்வராகவனின் முன்னாள் நண்பர் அரவிந்த் கிருஷ்ணா கேமராவைக் கையாளுகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் உருவாகிறதாம்.

Read more about: ajith, kreedom, priyadharshan, vijay
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil