»   »  300 மூட்டை அரிசி தானம் செய்து ட்ரைலர் வெளியிட்ட விஜய்!

300 மூட்டை அரிசி தானம் செய்து ட்ரைலர் வெளியிட்ட விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kaavalan Trailer Launch
தனது அடுத்த படமான காவலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ஏழைகளுக்கு உதவும் வகையில் இன்று நடத்தினார் நடிகர் விஜய்.

ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.

விஜய் நடித்த காவலன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது.

விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். காவலன் பட டிரைலரையும் வெளியிட்டார். விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஜய், "காவலன் பட டிரைய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. பட டிரெய்லர் விழாவுக்கு செலவிடும் தொகையை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறினேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஷக்தி சிதம்பரம் ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுக்க சம்மதித்தார். அதோடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் நடத்துவதாக கூறியதால், விழாவுக்கு வர சம்மதித்தேன் என்றார்.

விழாவில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், மேனேஜர் மற்றும் பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஜேஎஸ் திருமண மண்டபத்தையொட்டியுள்ள இடங்களில் விஜய்யின் பெரிய பெரிய கட் அவுட்டுகள், சாரட் வண்டியில் விஜய் பயணிப்பது போன்ற அட்டை பொம்மை போன்றவற்றை வைத்திருந்தனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil