»   »  விஜய் 43... ரசிகர்களுக்குத் தெரியாத பெர்சனல் சீக்ரெட்ஸ்!

விஜய் 43... ரசிகர்களுக்குத் தெரியாத பெர்சனல் சீக்ரெட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்துச் செல்பவர். தான்
எவ்வளவுதான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தேடி வந்த ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார்.

80களில் ரஜினி செய்த மாதிரி, மாதம் இருமுறை, இரண்டாவது ஞாயிறு மற்றும் நான்காவது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வந்த விஜய், போக்குவரத்து நெரிசல், போலீஸ் கெடுபிடி போன்ற காரணங்களால் ரசிகர்கள் சந்திப்பை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றிவிட்டார்.

பிடித்தமானவை...

பிடித்தமானவை...

பிடித்த நடிகர் அமிதாப்.

மனைவி சங்கீதாவை கீஸ் என செல்லமாக அழைப்பது பிடிக்கும்.

நகை விளம்பரத்தில் நடித்தாலும் கூட நகை மீது சுத்தமாக ஆசை கிடையாது மனிதருக்கு. அபூர்வமாக சில நேரங்களில் ஒரு சின்ன மோதிரம் விரல்களில் மின்னும்.

கறுப்பு நிற கார்கள்தான் இஷ்டம்.

அம்மாவின் பாடல்களுக்கு...

அம்மாவின் பாடல்களுக்கு...

அம்மாவின் பாடல்களுக்கு பெரிய ஃபேன். ஆரம்ப காலங்களில் கச்சேரி என்றால் தவறாமல் ஆஜராகி முடியும் வரை ரசிப்பார்.

பிள்ளைகள்...

பிள்ளைகள்...

பிள்ளைகள் அவர்களது இஷ்டத்துக்கு எந்த துறைக்கு வேண்டுமானாலும் போகட்டும் என்பது விஜயின் முடிவு. ஆனால் படிப்பு மிக முக்கியம். இப்போதைக்கு அதில் மட்டும் தான் அவர்களது கவனம் இருக்க வேண்டும் என்பதில் கறாராக இருக்கிறார்.

அண்ணாமலை ரஜினி

அண்ணாமலை ரஜினி

அண்ணாமலை படத்தில் ரஜினி தனது நண்பனிடம் சவால் விட்டு பேசும் பன்ச் டயலாக் விஜய்க்கு மிகவும் பிடிக்கும். தனது நடிப்பு ஆசையை அப்பாவிடம் வெளிப்படுத்தும்போது அதனைத்தான் பேசிக் காட்டினார். அதேபோல் ரஜினி படங்களில் விஜய்க்கு அண்ணாமலையை ரீமேக் செய்து நடிக்கவும் ஆசை இருக்கிறது.

ண்ணா...

ண்ணா...

எல்லோரையுமே என்னங்ணா போட்டு தான் பேசுவார். மிகவும் நெருங்கிய கல்லூரி நண்பர்கள் மட்டும் மச்சி.

லண்டன் -பேவரைட்

லண்டன் -பேவரைட்

பிடித்த இடம் லண்டன். ஃப்ரீயானால் குடும்பத்தோடு கிளம்பி விடுவார். லண்டனில் சங்கீதாவின் அப்பா வீடு இருக்கிறது. முதலில் அப்பா சாய்ஸ்... அதன் பிறகு மகன், மகளின் சாய்ஸ்களில் தான் மற்ற நாடுகள் எல்லாம்.

ஸ்போர்ட்ஸ்

ஸ்போர்ட்ஸ்

விளையாட்டில் டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். பார்ட்னர் மகன் சஞ்சயும், மகள் சாஷாவும்.

பிரபுதேவா ஃபேன்

பிரபுதேவா ஃபேன்

டான்ஸில் பொளந்து கட்டும் விஜய்க்கு பிடித்த டான்சர்கள் தமிழில் பிரபுதேவா, லாரன்ஸ்.

பாலிவுட்டில் மாதுரி தீக்ஷித் மீது இஷ்டம் உண்டு. காரணம் அவரது டான்ஸ்.

வீடியோ கலெக்ஷன்

வீடியோ கலெக்ஷன்

மகன், மகளின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வீடியோ எடுத்து பெரிய கலெக்‌ஷனாக வைத்திருக்கிறார். அதுதான் அவர்களுக்கு திருமணத்தின்போது அவர் தரவிருக்கும் பரிசு.

அம்மா பிள்ளை

அம்மா பிள்ளை

விஜய் ஒரு அம்மாப் பிள்ளை. பிறந்தநாளுக்கு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாயின் முகத்தை பார்த்தே ஆக வேண்டும் அவருக்கு.

தங்கை பாசம்

தங்கை பாசம்

விஜய்யின் மனதில் இருக்கும் மறக்க முடியாத துயரம் அவரது தங்கையின் மறைவு. சிறுவயதிலேயே தங்கை வித்யாவை இழந்ததை இன்னமும் அவரால் மறக்க முடியாமல் தவிப்பார்.

புதிய கெட்டப்

புதிய கெட்டப்

விஜய்யின் வீட்டில் அவருக்கென தனி ரூம், தனி ஹோம் தியேட்டர் உண்டு. தினமும் ஒரு படம் அவசியம் பார்த்தே ஆக வேண்டும். ஆங்கில படங்களை விரும்பி பார்ப்பார். புதிய கெட்டப்களில் நடிக்கும் ஆசை உண்டு. ஆனால் தனக்கு செட் ஆகுமா என்ற சின்ன தயக்கமும் உண்டு.

பக்கா நான்- வெஜ்

பக்கா நான்- வெஜ்

சாப்பாட்டு விஷயத்தில் பக்கா நான் வெஜ். அம்மா கைப்பக்குவம் என்றால்அவ்வளவு பிடிக்கும். சங்கீதா வந்த பிறகும் இன்னமும் இது தொடர்கிறது.

திடீரென சமையலறையில் விஜய் நுழைந்தால் அழகான தோசையும், கமகம காபியும் நமக்கு கிடைக்கபோகிறது என அர்த்தம்.

தோசை பிடிக்கும், மொறுமொறுப்பாக இருக்க கூடாது. கொஞ்சம் மெதுமெதுப்பாக இருக்க வேண்டும். அதிலும் மட்டன் குருமா இருந்தால் ரொம்ப பிடிக்கும்.

சிம்பிள் காஸ்ட்யூம்

சிம்பிள் காஸ்ட்யூம்

விஜய் எப்போதுமே மிகவும் சிம்பிளான காஸ்ட்யூமையே தேர்ந்தெடுப்பார். எவ்வளவு பெரிய ஃபங்ஷனாக இருந்தாலும் சரி அவரது வழக்கம் இதுதான். விஜய் வெளியில் வரும்போது அணியும் ஆடைகளை தேர்ந்தெடுப்பது அவரது மனைவி சங்கீதாதான். பெர்சனல் காஸ்ட்யூமர்!

பழைய நட்புகள்

பழைய நட்புகள்

லயோலா கல்லூரியில் சத்தமே இல்லாமல் பழைய நண்பர்களுடன் சந்திப்பு நடக்கும். அப்போது நீங்கள் பார்க்கும் விஜயை நாம் இதுவரை பார்த்திருக்கவே மாட்டோம். அவ்வளவு கலகலப்பாக மாறிவிடுவார்.

தமிழ் போதும்

தமிழ் போதும்

தமிழில் மட்டும் தான் நடிப்பேன் என்பதில் பிடிவாதக்காரர். பிரபுதேவாவின் வற்புறுத்தலுக்காக ரவுடி ரத்தோரில் தலைகாட்டினார்.

பாட்டு

பாட்டு

விஜய் படங்களில் பாடல்கள் எப்போதுமே ஹிட்லிஸ்டில் இடம் பிடிக்கும். பாடல் ஒலிப்பதிவின் போது மிஸ் பண்ணவே மாட்டார்.

புதுமுகங்களின் நாயகன்

புதுமுகங்களின் நாயகன்

நிறைய புதுமுக இயக்குநர்கள் படங்களில் நடித்தவர், நிறைய புதுமுகங்களோடு ஜோடி சேர்ந்தவரும் விஜய்தான்.

மரியாதைக்குரிய விஜயகாந்த்

மரியாதைக்குரிய விஜயகாந்த்

விஜய்காந்த் மீது எப்போதுமே பெரும் மரியாதை வைத்திருப்பார். அதற்கு காரணம் செந்தூரப்பாண்டி. ஆமாம் விஜயின் ஆரம்பகால படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில் சோர்வின் உச்சிக்கே போன விஜயை தூக்கி நிறுத்தும் வகையில் விஜயகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துக்கொடுத்த படம் செந்தூரப்பாண்டி. அதனால் விஜயகாந்த் மீது தனி மரியாதை இருக்கும். சின்ன சின்ன கேரக்டரில் விஜயகாந்த் நடித்து வந்தபோது அவரை ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்துடன்

அஜீத்துடன்

அஜித்துடன் இணைந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படம் சரியாக போகாததால் தளபதி, தல இணைந்ததே நமக்கு சரியாக தெரியாமல் போய்விட்டது. இருவரும் மீண்டும் நடிக்கவிருந்த படம் நேருக்கு நேர். ஆனால் அதில் அஜீத் நடிக்க முடியாமல் போனது.

டாக்டர்

டாக்டர்

1998ல் கலைமாமணி விருது பெற்றார். 2007ல் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திருப்புமுனைப் படங்கள்

திருப்புமுனைப் படங்கள்

பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ஃப்ரெண்ட்ஸ், கில்லி, போக்கிரி, துப்பாக்கி ஆகியவை விஜய்யின் கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படங்கள்.

பன்ச் டயலாக் பேசி பிரபலம் அடைந்ததில் ரஜினிக்கு அடுத்து விஜய் தான் மாஸ்.

மக்கள் மன்றம், உதவிகள்

மக்கள் மன்றம், உதவிகள்

சத்தமே இல்லாமல் உதவிகள் செய்துவரும் தனது ரசிகர் மன்றம் மூலமாக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2009 ஜுலையில் தொடங்கியதுதான் மக்கள் மன்றம்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்படும்.

-க.ராஜிவ் காந்தி

English summary
Here is the compilation of Vijay's personal pages.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos