9 ஆண்டுகளை கடந்த துப்பாக்கி படம்... ட்ரெண்டாக்கிவரும் விஜய் ரசிகர்கள்!

சென்னை : விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 2012 நவம்பர் 13ம் தேதி வெளியான படம் துப்பாக்கி.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 9 ஆண்டுகள் கடந்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

துப்பாக்கி படம்

துப்பாக்கி படம்

தளபதி என்று தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2012ல் வெளியானது துப்பாக்கி படம். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 நவம்பர் 13ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் ஹாரீஸ் ஜெயராஜ்.

சிறப்பான படம்

சிறப்பான படம்

விஜய் கேரியரில் இந்தப் படத்திற்கு சிறப்பான இடம் உண்டு. இந்தப் படத்திற்கு பிறகே அவர் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து தொடர்ந்து தனது படங்களை ஹிட் செய்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். அவர் படத்தில் மிகவும் அழகாக காட்டப்பட்டிருந்தார்.

சிறப்பான காதல் காட்சிகள்

சிறப்பான காதல் காட்சிகள்

படத்தின் துவக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் இடையிலான காதல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. மேலும் ஜெயராம், சத்யன் உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மும்பையை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.

ராணுவ அதிகாரியாக விஜய்

ராணுவ அதிகாரியாக விஜய்

இந்தப் படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். விடுமுறைக்கு தன்னுடைய வீட்டிற்கு வரும் அவர் பெண் பார்ப்பது முதல் வெடிகுண்டு வைத்தவனின் சதித்திட்டங்களை முறியடிப்பது என கதை நகரும். காட்சிக்கு காட்சி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது திரைக்கதை.

 ஹாரீஸ் ஜெயராஜ் இசை

ஹாரீஸ் ஜெயராஜ் இசை

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கட்டிப் போட்டது. படத்தின் டைட்டில் மற்றும் காதல் பாடல்கள் அனைத்திலும் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஹாரீஸ் ஜெயராஜ். பின்னணி இசையிலும் பின்னி பெடலெடுத்திருந்தார். விஜய் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்திருந்தார்.

9 ஆண்டுகளை கடந்த துப்பாக்கி

9 ஆண்டுகளை கடந்த துப்பாக்கி

இந்நிலையில் துப்பாக்கி படம் வெளியாகி 9 வருடங்கள் ஆனதையொட்டி தற்போது அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை குறிக்கும் வகையில் ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். விஜய் படம் என்றாலே மாஸ் தான் என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தில் விஜய்

பீஸ்ட் படத்தில் விஜய்

தற்போது பீஸ்ட் படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X