Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2021ல் வில்லன்களாக மிரட்டிய நடிகர்கள்.. விஜய்சேதுபதி முதல் எஸ்.ஜே. சூர்யா வரை.. முதலிடத்தில் யாரு?
சென்னை: 2021ம் ஆண்டிலும் சினிமாவுக்கு கொரோனா பரவல் மிகப்பெரிய பிரச்சனையை கொடுத்தது.
ஆனால், அதையும் தாண்டி சில நல்ல திரைப்படங்கள் வெளியாகி சினிமா துறையினரை காப்பாற்றியது என்றே சொல்லலாம்.
சில ஹீரோக்கள் வில்லன்களாகவும் இந்த ஆண்டு வெறித்தனமாக மிரட்டியதையும் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். அதில் டாப் 5 நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
அஜித்துக்கு
வில்லனாக
விரும்பும்
அண்ணாத்த
வில்லன்!

5. ஜான் கொக்கன்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஆப்போசிட்டாக வேம்புலி கதாபாத்திரத்தில் ஜான் கொக்கன் நடித்து இருந்தார். வில்லன் என்று கூட சொல்ல முடியாமல் அவர் தனி ஹீரோவாகவே நடித்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். கட்டுமஸ்த்தான உடல் கொண்டு காட்டுத்தனமாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

4. விநய்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டாக்டர் திரைப்படத்தில் வில்லனாக ஹீரோ விநய் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார். சிறுமிகளை கடத்தி தொழில் பண்ணும் டான் என்றாலும் கரடு முரடாக இல்லாமல் செம கூலாக விநய் நடித்து அசத்தி இருந்தார்.

3. நட்டி நடராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோ நட்டி நட்ராஜ் மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தார். ஆதிக்க வெறியுடன் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்து இருந்தார் நட்டி நட்ராஜ்.

2. எஸ்.ஜே. சூர்யா
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக ஆண்டு இறுதியில் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஒரு பக்கம் ஹீரோவாகவும் ஒரு பக்கம் வில்லனாகவும் நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யா மாநாடு திரைப்படத்தில் தனுஷ் கோடி கதாபாத்திரத்தில் ஹீரோவை கொல்ல விரும்பாத வில்லனாக நடித்து கலக்கி இருந்தார்.
Recommended Video

விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு பல படங்கள் வெளியானாலும் ஹீரோவாக அவருக்கு எந்தவொரு படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் பவானியாக மிரட்டி எடுத்து இருந்தார் விஜய்சேதுபதி அடுத்ததாக உலகநாயகனுக்கே வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.