»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்தோடு காணாமல் போன ஹரிணி மீண்டும் வருகிறார். விஜய்க்கு ஜோடியாக சச்சின் என்ற படத்தில்நடிக்க இருக்கிறார்.

இதில் ஹரிணியோடு விஜய்க்கு இரண்டு ஹீரோயின்களாம். இன்னொரு ஹீரோயினாக நடிக்க இருப்பது பாலிவுட்நடிகை பிபாஷா பாசு. மும்பையில் மல்லிகா ஷெராவத், செலீனா ஜெட்லீ, தியா மிர்ஸா ஆகியோருடன் கவர்ச்சியில்மல்லுக்கு நிற்கும் பிபாசாவுக்கு இதுவே முதல் தமிழ்ப் படம்.

இவரது சொந்த ஊர் மேற்கு வங்காளம். பிபாஷாவின் தாராள மனப்பான்மையைக் கண்டு, பாலிவுட் இவரை வாரிஎடுத்துக் கொண்டது. கணிசமான அளவிற்கு இந்திப் படங்கள் கையில் இருந்தாலும், பிபாஷா பிற மொழிப்படங்களில் தலைகாட்ட ஆர்வமாகவே இருக்கிறார்.

தனது தாய்மொழியை மறக்காமல், அண்மையில் அமெரிக்கா, அமெரிக்கா என்ற வங்காளப் படத்தில் நடிக்கஒத்துக் கொண்டார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக மிதுன் சக்கரவர்த்தியின் பையன் புரோசென்ஜித்நடிப்பதாக இருந்தது.

ஆனால் இப்போது மிதுன் சக்கரவர்த்தியே நடிக்கிறார். இவர் அந்தக் கால நடிகர். இருப்பினும் பிபாஷா மறுப்புஏதும் சொல்லாமல் பேசியபடி துட்டு வந்தால் போதும் என்று கருமமே கண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தென்னகத்தில் இளவட்ட பசங்களுடன் நடிக்க ஆர்வமாய் இருப்பதாய் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்பிபாசா. அதையே கப் என்று பிடித்துக் கொண்டு தனது படத்தில் நடிக்க வைக்க கூட்டி வந்துவிட்டார் விஜய்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சச்சின் என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

அண்மையில் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து கோகோ கோலா விளம்பரத்தில் விஜய் நடித்தார். அந்தப் பாதிப்போஎன்னவோ.

தற்போது திருப்பாச்சி படத்தில் த்ரிஷாவுடன் நடித்து வரும் விஜய், அந்தப் படத்தை முடித்த பிறகே சச்சின்படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

சச்சினில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது ஹரிணி தான். பாய்ஸ் ஊத்திய ஊத்தில் ஊரை விட்டே ஓடியஹரிணி தெலுங்கில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். இவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்.

படத்தை இயக்கப் போவது ஜான் மகேந்திரன். தமிழ் சினிமாவை தனது படங்கள் மூலம் யதார்த்த உலகுக்குஅழைத்து வந்த இயக்குநர் மகேந்திரனின் மகன்தான் இவர்.

கலைப்புலி தாணுவிற்கு விஜய் கால்ஷீட் கொடுத்ததும், ஏராளமான கதைகளைக் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால்தனது அசத்தலான கதை மூலம் தாணு, விஜய் இருவரையும் அசத்தியதோடு, இயக்குநர் வாய்ப்பையும் பறித்துக்கொண்டார் ஜான் மகேந்திரன்.

தாணு படம் என்றாலே செலவிற்குப் பஞ்சமிருக்காது. அதோடு நல்ல கதையும் சேர்ந்து கொண்டதால், இந்த சச்சின்நிச்சயம் 100 நாள்களைத் தாண்டுவது உறுதி என்ற நம்பிக்கை விநியோகஸ்தர்களிடம் எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil