»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தன் மனைவி சங்கீதா பெயரில் திருமண மண்டபம் கட்டியுள்ள நடிகர் விஜய், அங்கு 6ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

சென்னைக்கு அருகே போரூரில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. நேற்று இங்கு ஆறுஜோடிகளுக்கு இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்தார் விஜய். இந்தத் திருமண நிகழ்ச்சிக்குத்தலைமை தாங்கி அவர் பேசுகையில்,

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டினால் நல்ல லாபம் வரும் என்று தெரியும். பலரும் அதையே கட்டக்கூறினார்கள். ஆனால் மனதுக்கு திருப்தி ஏற்படும் வகையில் கல்யாண மண்டபத்தைக்கட்டியுள்ளேன். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதை விட இது பெரிய விஷயம். இந்த ஆறு ஜோடிகள்மற்றும் அவர்களது பெற்றோரின் மனதில் ஏற்பட்டுள்ள சந்தோஷம்தான் எனக்கும் சந்தோஷம்என்றார் விஜய்.

மணமக்களுக்கும் அவருடைய உறவினர்களுக்கும் தன் கையாலேயே விருந்து பரிமாறியும் விஜய்மகிழ்ந்தார்.

இந்தத் திருமண நிகழ்ச்சியில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமாகிய எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார்ஷோபா, மனைவி சங்கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடிவிட்டதால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீஸார் அவ்வப்போது லேசான தடியடிநடத்தி ரசிகர்களைக் கலைத்தனர்.

கல்யாண மண்டபத் திறப்பு விழாவில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்உள்ளூர் பிரமுகர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்போதெல்லாம் தனது படங்களுக்கு சம்பளமாக தயாரிப்பாளர்களிடம் பணத்தையும், ஏரியாவினியோக உரிமையையும், கூடவே நிலங்களையும் தயாரிப்பாளர்களிடம் வாங்கஆரம்பித்துள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil