»   »  கேப்டன் மகன் ஆப்சென்ட்.. சுவையான நினைவுகளுடன் கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் விழா!

கேப்டன் மகன் ஆப்சென்ட்.. சுவையான நினைவுகளுடன் கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுரைவீரன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த்-வீடியோ

சென்னை : நடிகர் விஜயகாந்த் கலைத்துறையில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் மாபெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாபெரும் மாநாடாக இந்த விழா நடத்தப்பட்டது. கலைத்துறை மற்றும் அரசியலில் கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதையை சிறப்பாக விளக்கும் வகையில் குறும்படம் திரையிடப்பட்டது.

Vijayakanth 40 year in cine industry anniversary function

விஜயகாந்த்தின் செல்வாக்கிற்குக் காரணம் அவரது கலைப்பணியா இல்லை வள்ளல்தன்மையா என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பல்வேறு சுவையான சம்பவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், முன்னாள் தலைவர் சரத்குமார், சத்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விஜயகாந்த் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் லண்டனில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. அங்கிருந்தபடியே அவர் அனுப்பிய வீடியோ விழாவில் திரையிடப்பட்டது. அவருக்கு பிடித்த அப்பா விஜயகாந்தின் கண்களை அவர் கையில் டாட்டூவாக வரைந்திருக்கிறார்.

English summary
Actor Vijayakanth 40th year acting career anniversary ceremony is held yesterday. Leading actors, directors, party executives and volunteers were present at the function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X