»   »  சிறந்த குடிமகன் விருது முதல் 'மீம்ஸ் மெட்டீரியல்' வரை! - #HBDVijayakanth

சிறந்த குடிமகன் விருது முதல் 'மீம்ஸ் மெட்டீரியல்' வரை! - #HBDVijayakanth

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்துக்கு இன்று 66-வது பிறந்தநாள். சினிமாவிலும், அரசியலிலும் சமூகப் பணிகளிலும் அவரது பங்கு அளப்பரியது. அவரது சினிமா அரசியல் பற்றிய ஒரு பார்வை...

எழுபதுகளின் இறுதிக்காலம் அது. சினிமாவின் எந்தப் பின்னணியும் இல்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை... சினிமாவுக்கென முன்னிறுத்தப்பட்ட எந்த அடையாளங்களும் இல்லை... இத்தனைக்கும் அது ரஜினியும், கமலும் மசாலாப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலம். திருமங்கலத்திலிருந்து வந்தார் விஜயராஜ். நின்றார்... நிலைத்தார்.

வாய்ப்புத் தேடி :

வாய்ப்புத் தேடி :

ஹீரோவாக நடிக்க வாய்ப்புத் தேடிச் சென்னைக்கு வருவதற்கு முன் தன்னுடைய நண்பர் ஒருவர் சொன்னதுபோலவே ரஜினிகாந்த் ஸ்டைலில் பல ஃபோட்டோக்களை எடுத்து ஆல்பம் ஒன்றைத் தயார் செய்துள்ளார். தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்து அந்த ஆல்பத்தைக் காட்டி வாய்ப்புக் கேட்டுள்ளார்.

விஜயராஜ் to விஜயகாந்த் :

விஜயராஜ் to விஜயகாந்த் :

'அதான் ஒரு ரஜினி இருக்காரே அப்புறம் நீ எதுக்கு... எடுத்துட்டு ஊருக்குப் போ' என்று அந்த தயாரிப்பாளர் சொல்லிவிட்டாராம். அதன் பிறகே தன்னுடைய ஸ்டைலில் வேறு ஒரு ஆல்பம் தயார் செய்து வாய்ப்புத் தேடத் துவங்கியுள்ளார் விஜயகாந்த். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆர் ரசிகர் :

எம்.ஜி.ஆர் ரசிகர் :

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளை வர்ணித்துச் சந்தோஷப்படுவாராம். 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை 70 தடவைகளுக்கு மேல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து, சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்த சமயத்தில்தான் நண்பர் ஒருவருடன் சென்னைக்கு சினிமாவில் நடிக்கக் கிளம்பினார்.

எல்லோரையும் வாழ வைக்கும் கலைஞன் :

எல்லோரையும் வாழ வைக்கும் கலைஞன் :

இன்று அரசியல் ரீதியாகப் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், விஜயகாந்த்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை அத்தனை பேருக்குமான நம்பிக்கைப் பாடம்! சரத்குமார், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என அவர்மூலம் பிரபலமான நடிகர்களின் பட்டியலும் ரொம்பவே நீளம்!

வல்லினம் மெல்லினம் வராது :

வல்லினம் மெல்லினம் வராது :

முதல் பட வாய்ப்புத்தேடி அலையும்போது, 'உன்னோட தமிழ் நல்லாயில்லே...' எனச் சொல்லிப் பல இடங்களில் திருப்பி அனுப்பப்பட்டார். மதுரைக்கார விஜயராஜுக்கு நாக்கு புரளாது. வல்லினம், மெல்லினம் சரியாகப் பேச வராது. ஆனால், இன்று அவரது நாக்குச் சுழல்வதே நையாண்டியானது தனிக்கதை. 'வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன... மொத்தத் தமிழினமும் ஆதரவு தந்து தூக்கி நிறுத்தியது. அந்த நன்றி இன்னும் நெஞ்சுக்குள்ளே இருக்கு' என்பார் விஜயகாந்த்.

பெரும் சாதனை :

பெரும் சாதனை :

அந்தக் காலகட்டத்தில் சிறு பட்ஜெட் படங்களின் வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தார். கதைக்குத் தேவையென்றால் இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிப்பவர் எனும் நற்பெயர் உண்டு. தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984-ல் 'மதுரை சூரன்' முதல் 'ஜனவரி 1' படம் வரை 18 படங்களும் 1985-ம் ஆண்டில் மட்டும் 'அலை ஓசை'யில் ஆரம்பித்து 'நானே ராஜா நானே மந்திரி' வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது.

அரசியல் என்ட்ரி :

அரசியல் என்ட்ரி :

சினிமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், ஊழல் அரசியல்வாதிகளையும் பந்தாடிக்கொண்டிருந்தவருக்குப் போதாத காலம்... அரசியலுக்கு வந்தார். ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கத்தான் கட்சியைத் தொடங்கினார். அரசியலில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தவருக்கு அவரது உளறல் பேச்சே வில்லன் ஆனது. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் லெவலுக்குப் போய்ச் சறுக்கினார்.

மீம்ஸ் மெட்டீரியல் :

மீம்ஸ் மெட்டீரியல் :

அரசியல் மேடைகளில் விஜயகாந்த்தின் ரியாக்‌ஷன்கள், பேச்சுகள் எல்லாம் இப்போது நகைசுவைப் பட்டியலில் சேர்ந்துவிட்டன. சமூக வலைதளங்களில் அவரது பேச்சுகள் காமெடிக்காக வைரல் ஆகின்றன. 'இந்தியாவின் சிறந்த குடிமகன்' விருதைப் பெற்ற அவர்தான் இப்போது மீம்ஸ் உலகின் நையாண்டி மெட்டீரியல். காலம்தான் எவ்வளவு மூர்க்கமானது!

English summary
Vijayakanth is a versatile actor in tamil cinema. He also roles a major part in tamilnadu politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil