twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முழு சம்பளமும் முதலில் வாங்கும் ஹீரோஸ் மத்தியில் விஜயகாந்த்... நடிகர் சித்ரா லஷ்மணன் சுவாரசிய தகவல்

    |

    சென்னை: சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழாவை திரைத் துறையைச் சேர்ந்த வெகு சிலர் மட்டுமே கொண்டாடினர்.

    நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயலாற்றிய அவருக்கு பாராட்டு விழா எடுக்கப் போவதாக நடிகர் சங்க நிர்வாகிகளும் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லஷ்மணன் விஜயகாந்துடன் பணியாற்றியது பற்றி சமீபத்தில் கூறியுள்ளார்.

    ”அட யாருப்பா இது... செளந்தர்யாவ அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி?”: இன்ஸ்டாவை கலக்கும் க்யூட் சித்ரா”அட யாருப்பா இது... செளந்தர்யாவ அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி?”: இன்ஸ்டாவை கலக்கும் க்யூட் சித்ரா

    புதிய தீர்ப்பு

    புதிய தீர்ப்பு

    நடிகர்கள் கமலஹாசன், விஜயகாந்த், மோகன், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தவர் சித்ரா லஷ்மணன். மண்வாசனை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி தான் தயாரித்த மூன்றாவது படத்திலேயே சிவாஜி கணேசனை நடிக்க வைத்தார். வாழ்க்கை என்ற பெயரில் வந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து அவர் எடுத்த படம் தான் புதிய தீர்ப்பு.

    தெலுங்கு ரீமேக்

    தெலுங்கு ரீமேக்

    சித்ரா லக்ஷ்மணன் தயாரிப்பில் பல படங்களை இயக்கியிருந்த சி.வி.ராஜேந்திரன் அவர்கள் தான் புதிய தீர்ப்பு படத்தின் இயக்குநர். வாழ்க்கை திரைப்படத்தையும் அவர்தான் இயக்கியிருந்தார் அந்த வெற்றியின் காரணமாக மீண்டும் இந்தப் படத்தில் இருவரும் பணிபுரிந்தனர்.

    நான்தான் நடிப்பேன் என்ற அம்பிகா

    நான்தான் நடிப்பேன் என்ற அம்பிகா

    அந்தக் காலகட்டத்தில் விஜயகாந்துடன் அதிக படங்கள் நடித்திருந்த நடிகை நளினியைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யலாம் என்று சித்ரா லஷ்மணன் எண்ணியிருந்தாராம். ஆனால் அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளின் அபிமானம் பெற்றவர் என்பதால் அம்பிகாவே உரிமையோடு வந்து நான்தான் இந்தப் படத்தில் நடிப்பேன் என்று கதாநாயகியாக ஒப்பந்தமானாராம்.

    விஜயகாந்த் பெருந்தன்மை

    விஜயகாந்த் பெருந்தன்மை

    இந்தக் காலகட்டத்தில் கதாநாயகர்கள் பெரும்பாலும் முக்கால்வாசி சம்பளத்தை படம் துவங்கும் முன்பே வாங்கிவிடுவர். சிலர் மொத்த சம்பளத்தையும் வாங்கிவிட்டுத்தான் ஷூட்டிங்கிற்கே வருவார்கள். அவ்வளவு பெருந்தன்மையாக இருக்கிறார்கள் என்று கிண்டலாக கூறியிருக்கிறார் சித்ரா லக்ஷ்மணன். ஆனால் புதிய தீர்ப்பு படத்திற்காக விஜயகாந்த்திற்கு அவர் பேசிய சம்பளம் 2.5 லட்சமாம். அதில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் அதாவது இரண்டு சதவீதம் மட்டும்தான் அட்வான்ஸ் தொகையாக கொடுத்தாராம். படம் முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்த பின்பு அதனை போட்டு பார்த்த சித்ரா லக்ஷ்மணனுக்கு படம் வெற்றி பெறாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இருப்பினும் மீதமுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு விஜயகாந்த்திடம் சென்று சம்பளத்தை குறைக்க முடியுமா என்று கேட்டு பார்த்தாராம். ஒருவேளை விஜயகாந்த் முடியாது என்று சொல்லி இருந்தால் மொத்த சம்பளத்தையும் கையில் வைத்திருந்ததால் கொடுத்திருப்பேன். ஆனால் விஜயகாந்த் பெருந்தன்மையாக 50000 கழித்துக் கொண்டதாக சித்ரா லஷ்மணன் பெருமையாக கூறியுள்ளார். ன் சசி.

    English summary
    Actor Vijayakanth's 70th birthday was recently celebrated by very few people from the film industry. Nadigar Sangam members have also announced that they will hold an appreciation ceremony for him for his excellent performance as the president of the Actors' Association. In this case, actor, producer and director Chitra Lakshmanan recently spoke about the experience of working with Vijayakanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X