»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தென்னவன் படம் வந்தால் தமிழ்நாடே கதி கலங்கிப் போகுமாம். கூறுகிறது கேப்டன் விஜயகாந்த் வட்டாரம்.

அப்படி என்னதான் படத்தில் இருக்கிறதாம்? அதிரடியான பல சமாச்சாரங்களை படத்தில் வைத்துள்ளாராம்கேப்டன்.

படத்தின் கதைப்படி, ஐ.ஏ,எஸ். பாஸ் செய்து சாதாரண உதவி கலெக்டராக தனது பணியை ஆரம்பிக்கும்விஜய்காந்த் பின்னர் மாவட்டக் கலெக்டர், மாநிலத் தேர்தல் அதிகாரி என படிப்படியாக உயர் பதவிகளைப்பிடிக்கிறாராம்.

ஒவ்வொரு பதவியிலும் இருக்கும்போதும், அந்தந்தப் பதவிகளின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடிஅரசியல்வாதிகள், கந்துவட்டி கும்பல், கள்ளச் சாராய கும்பல் ஆகியோருக்கு எதிராக அவர் எடுக்கும் அதிரடிநடவடிக்கைகள் தான் கதையம்.

சமூகத்தின் இன்றைய அவலங்களை அப்பட்டமாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்களாம். ஒவ்வொருஅதிகாரியும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அதிரடியாக சொல்லி இருக்கிறார்களாம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் குட்டிச் சுவராகியுள்ளதாகவும், அதை சீர்திருத்துவது எப்படிஎன்பதாகவும் கதை போகிறதாம்.

அத்தோடு, லியாகத் அலிகான் வசனத்தில் அரசியல்வாதிகளையும் வாங்கு, வாங்கென்று வாங்கியிருக்கிறார்விஜய்காந்த் என்கிறார்கள்.

தேர்தல் முறைகேடு தொடர்பாக ஆளும் அரசியல்வாதிகளுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் நடக்கும்மோதல் தான் படத்தின் ஹை-லைட்டாம்.

எந்தப் பதவியில் இருந்தாலும் விஜய்காந்த் சண்டை போட்டுத் தானே ஆக வேண்டும். இதிலும் கலெக்டராக,தலைமைச் தேர்தல் ஆணையராக இருந்து கொண்டே அதிரடி பைட்டுகளும் போடுகிறாராம்.

கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வல்லரசு போன்ற படங்களுக்கு இணையான பரபரப்பை இந்தப் படம்ஏற்படுத்தும் என்கிறார்கள்.

படத்தில் கிரணும் இருக்கிறார். விஜய்காந்த் படத்தில் ஹீரோயின்களுக்கு என்ன வேலையே அந்த வேலையைமட்டும் கிரண் பார்க்கிறார். அதாவது, 3 பாட்டுகளுக்கு டான்ஸ் ஆடுகிறார். அத்தோடு சரி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil