»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதலில் ராஜ் டிவியுடன் மோதி நம்பர் டூ இடத்தைப் பிடிப்போம் என்று கூறிக் கொண்டு தான் விஜய் டிவியை வாங்கியது ஸ்டார் டிவி.

ஆனால், இப்போது நேரடியாக சன் டிவியுடனே மோதத் தயாராகிவிட்டது.

புதிய புதிய நிகழ்ச்சிகள், ஹை குவாலிட்டி டிரான்ஸ்மிஷன் என்று கலக்கிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.

நாளை (ஏப்ரல் 7) முதல் வாரந்தோறும் நேயர்களை குஷிப்படுத்தும் 5 புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

சன் டிவிக்கு இணையாக இந்த ஐந்து நிகழ்ச்சிகளும் இருக்கும் என்று விஜய் டிவி தரப்பு உறுதியிட்டு கூறுகிறது. நிகழ்ச்சிகள் குறித்த ஒரு முன்னோட்டம்...

"சமையல் சமையல்"

வழக்கமாக அடுப்பும் கையுமாக ஒருவர் வந்து சமையல் செய்து காண்பித்து விட்டுப் போவார். ஆனால் இது வித்தியாசமானது.

இது ஒரு போட்டி சமையல் நிகழ்ச்சி. இரண்டு பேர் இதில் பங்கேற்பார்கள். குறிப்பிட்ட நேரம் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அந்த நேரத்திற்குள்அவர்கள் ஒரு சமையல் ஐட்டத்தை சமைத்துக் காட்ட வேண்டும்.

முதலில் செய்து முடிப்பவருக்கு ரூ.10,000 பரிசு. கராத்தே நபுணர் ஷீஹான் ஹூசைனியும் பாடகி ஹேமமாலினியும் (பாடகர் யுகேந்திரனின் மனைவி) இணைந்து இந்தநிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

"நெஞ்சம் மறப்பதில்லை"

கவியரசு கண்ணதாசன் குறித்த இந்நிகழ்ச்சியை அவரது மகள் விசாலி கண்ணதாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் கண்ணதாசனின் காலத்தால் அழியாத பாடல்களும், அந்தப் பாடல் தோன்றிய வரலாறும் விளக்கிக் காட்டப்படும்.

நம் நெஞ்சங்களை விட்டு அகலாத பாடல் காட்சிகளும் நிச்சயம் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும்.

"பாக்ஸ் ஆபீஸ்"

ஜேம்ஸ் வசந்தன் மற்றும் உமா பத்மநாபன் (ஆமாங்க, "வணக்கம் தமிழகம்" உமாவேதான். இவர் சன் டிவியிலிருந்து ஜூட் விட்டு விட்டார்) இணைந்துவழங்கும் நிகழ்ச்சி இது.

திரைப் பாடல்களின் கவுண்ட் டவுன் நிகழ்ச்சியான இதில் எந்தப் பாடல், எந்த இடத்தில் உள்ளது என்பதை இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமானமுறையில் வழங்கப் போகிறார்களாம்.

வழக்கமாக எல்லா டிவிகளிலும் 10 பாடல்கள் இடம் பெறும். ஆனால் இதில் ஐந்து மட்டும்தானாம்.

"லொள்ளு சபை"

அரசியல் மற்றும் சமூகத்தை நையாண்டி செய்யும் நிகழ்ச்சிதான் "லொள்ளு சபை".

கிட்டத்தட்ட சன் டிவியின் "அடடா அமர்க்களம்" நிகழ்ச்சி சாயலில் இருந்தாலும், இது வித்தியாசமானதாக இருக்கும் என்று விஜய் டிவி தரப்பு கூறுகிறது.

"திரைப் பார்வை"

கார்ட்டூனிஸ்ட் மதன் வழங்கும் இந்த அரை மணி நேர நிகழ்ச்சியில், புதிய படங்கள் குறித்த விமர்சனம் இடம் பெறும்.

வித்தியாசமான ஸ்டைலில் புதிய படம் குறித்து விமர்சனம் செய்கிறார் மதன் (அப்போ "குமுத"த்தில் சினிமா விமர்சனம் என்னாயிற்று மிஸ்டர் மதன்?).

காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்தப் புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே சன் டிவியை விட்டு "இந்தாண்ட, அந்தாண்ட" யாருமே நகராத நிலை உள்ளது. அதை உடைத்துக் காட்டும் வகையில் இந்தப்புதிய நிகழ்ச்சிகள் அமையும் என்று விஜய் டிவியின் தயாரிப்பு நிர்வாகி பிரதீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil