»   »  மீண்டும் சினிமாவில் விகடன்!

மீண்டும் சினிமாவில் விகடன்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
விகடன் மீடியாவின் முதல் படமான 'சிவனின் மனதில் சந்தியா', அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனைகளைப் படைத்த நிறுவனம் எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனம். அந்தக் காலத்திலேயே பல லட்சம் செலவு செய்து (இன்றைக்கு அது சிவாஜி படத்தின் பட்ஜெட்டுக்கு சமம்) பிரமாண்டமாக எடுத்த சந்திரலேகா, அவ்வையார், வஞ்சிக் கோட்டை வாலிபன் உள்ளிட்ட பல படங்கள் ஜெமினியின் சாதனையை இந்தியத் திரையுலக வரலாற்றில் பதிவு செய்தவை.

இந்தியத் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.எஸ்.வாசன். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே ஏதாவது ஒரு சாதனைக்குச் சொந்தமானதாக உள்ளது.

1941ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடையும் வரை திரையுலகில் பெரும் சாதனையாளராக வலம் வந்தார் வாசன். தமிழில் மட்டுமல்லாது இந்தித் திரையுலகிலும் முத்திரை பதித்தவர் வாசன்.

அவர் இறந்த பின்னர் அவரது புதல்வர் பாலசுப்ரமணியம், திரைப்படத் தயாரிப்பைத் தொடரவில்லை. சில படங்கள் தோல்வி அடைந்ததால் தயாரிப்புத் துறையிலிருந்து விலகினார் பாலசுப்ரமணியம்.

தற்போது விகடன் குழுமம் டிவி தொடர்களை தயாரித்து அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கோலங்கள் (தேவயானி நடித்துள்ளார்) முன்னணி சீரியலாக கோலோச்சி வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளது விகடன். விகடன் குழுமத்தின் பொறுப்பை நிர்வகித்து வரும் பாலசுப்ரமணியத்தின் மகன் பி.சீனிவாசன், தாத்தா ஆட்சி புரிந்த திரையுலகில் தானும் சாதிக்க முடிவெடுத்து படத் தயாரிப்பில் குதித்துள்ளார்.

சமீபத்தில் ஜீவாவை தங்களது முதல் படத்தின் நாயகனாக விகடன் குழுமம் ஒப்பந்தம் செய்தது. இப்படத்துக்கு சிவனின் மனதில் சந்தியா என்று பெயர் சூட்டியுள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக இருந்த ராஜேஷ் இப்படத்தை இயக்கப் போகிறார்.

படத்தின் கதையைக் கேட்டதுமே கால்ஷீட் கொடுக்க ஒப்புக் கொண்டாராம் ஜீவா. அந்த அளவுக்கு அக்கதை அவரை அட்ராக்ட் செய்து விட்டதாம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி சரவணன் கேமராவைக் கையாளுகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

Read more about: vikatan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil