»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய்க்கு அவரது சென்னை ரசிகர்கள் புதுப் பட்டம் கொடுத்துள்ளனர்.

தரமணி பகுதியில் அவரது ரசிகர்கள் சமீபத்தில் புதிய ரசிகர் சங்க கிளையைத் துவக்கினர். அந்த ரசிகர் மன்றத்திற்கு என்ன பெயர் தெயுமா?யூத் காதல் சி.பி.ஐ. விஜய் ரசிகர் மன்றம்.

ஷாஜகான் படத்தில் இளைஞர்களின் காதலை சி.பி.ஐ. மாதிரி விசாரித்து, பாதுகாப்புத் தந்து, ரிஸ்க் எடுத்து சேர்த்து வைத்ததால்இந்தப் பெயராம்.
அடாடாடா...

நம்ம ஊரில் வாய்க்கு வந்ததெல்லாம் பட்டம் தான். நல்லவேளை இன்டர்போல், சி.ஐ.ஏ., ஐ.பி., ரா, எப்.பி.ஐ.இவையெல்லாம் தப்பிவிட்டன.

கண் தானம் செய்த காசி

காசி படத்தில் கண் பார்வையற்றவராக நடித்த விக்ரம், அந்த கேரக்டல் மெய் மறந்து போய் விட்டாராம்.

படத்திற்காக பார்வையற்றவர் போல நடித்ததற்கே இவ்வளவு சிரமமாக இருக்கிறதே, பிறவியிலிருந்து பார்வையற்றவர்களாகநடமாடிக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்பதை உணர்ந்த அவர் தனது கண்களைத் தானம் செய்துள்ளார்.

என்னால் முடிந்த சிறு உதவி இது. இந்த தானம் எனக்கு வாழ்க்கையில் எந்த விஷயமும் தராத திருப்தியைத் தந்துள்ளது என்கிறார்புன்னகையுடன்.

Read more about: actor, actress, fan clubs, richa, shajahaan, vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil