»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சின்ஹாத்ரி என்ற படம் தமிழிலும் எடுக்கப்படவுள்ளது. அதில் நடிக்கஇருப்பர் விக்ரம்.

தெலுங்கில் இதைத் தயாரித்த துரை சாமி ராஜூ, சமீபத்தில் விக்ரமைச் சந்தித்து இது குறித்துப் பேசினாராம்.இதையடுத்து படத்தின் சிடியையும் கொடுத்து விக்ரமைப் பார்க்கச் சொன்னாராம்.

கதையில் லயித்துப் போன விக்ரம் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டுவிட்டார். பாலாவின் இயக்கத்தில் நடித்துவரும் பிதாமகன் படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்துக்கு விக்ரம் கால்ஷீட் தரலாம் என்கிறார்கள்.

இதில் விக்ரமுக்கு இரண்டு ஹீரோயின்களாம். ஒருவர் பூமிகா. இன்னொருவர் தெலுங்கின் சமீபத்திய கவர்ச்சிப்புயல் அங்கிதாவாம். தெலுங்கிலும் இந்த இருவர் தான் ஹீரோயின்களாக நடித்தனர்.

சின்ஹாத்ரி ஆந்திராவில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிப்புக்குத் தீனி போடும்கேரக்டர் என்பதால் இதில் நடிக்க விக்ரம் மிகவும் ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார் என்கிறார்கள்.

ரோஜாக் கூட்டத்துக்குப் பின் தெலுங்கிலேயே கவனம் செலுத்தி வரும் பூமிகாவை இந்தப் படம் மீண்டும் தமிழுக்குஅழைத்து வருகிறது.

ராஜ்கிரணுக்கு உதவும் இளையராஜா

கோலிவுட்டில் இருந்து ஏறக்குறைய வெளியேறி விட்ட ராஜ்கிரணுக்கு, இளையராஜா இப்போது மீண்டும் ஒருவாய்ப்பு தந்துள்ளார்.

தனது காதல் மனைவி பத்மஜோதியுடன் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு படியேறி வந்த ராஜ்கிரணுக்கு இப்போதுதான் நிம்மதி பிறந்திருக்கிறது. பத்மஜோதியையே தயாரிப்பாளராக போட்டு ஆதாம் ஏவாள் படத்தை சொந்தபேனரில் ஆரம்பித்திருக்கிறார் ராஜ்கிரண்.

ஒரு படத்துக்கு ரூ. 1 கோடி வரை வாங்கிய முதல் டைரக்டர் ராஜ்கிரண் தான். அந்த அளவுக்கு பேமிலிசென்டிமெண்ட் படங்களை இயக்கி, தயாரிப்பாளர்களுக்கு கோடிகளைக் குவித்துத் தந்தவர். இப்போது படுகஷ்டத்தில் இருக்கிறார்.

இதையடுத்து அவரைக் கை தூக்கிவிட இசைஞானி இளையராஜா தான் பணம் தந்து ஆதாம் ஏவாள் படம் எடுக்கஉதவி வருகிறாராம். ராஜ்கிரணுக்கு என எப்போதும் மிக ஸ்பெஷல் மியூசிக் தரும் இளையராஜா, இந்தப்படத்துக்கும் அட்டகாசமான கிராமத்து மெட்டுக்கள் போட்டுத் தந்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil