»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் என்ன நேரத்தில் அந்நியன் படத்தை ஆரம்பித்தாரோ தெரியவில்லை, சிக்கல் மேல் சிக்கலாகி வருகிறது.

படத்தை தொடங்கும்போது மெகா பட்ஜெட் படம் என்று முடிவெடுத்து தான் சூட்டிங்குக்குக் கிளம்பினார்கள்.படத்தில் முக்கியமான ஒரு சண்டைக் காட்சியை மட்டும் ஒன்றே கால் கோடி ரூபாயில் எடுத்துள்ளார்கள். இதற்காகவியட்நாம் நாட்டிலிருந்து 22 சண்டைக் காட்சி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து 240காமிராக்கள் தருவிக்கப்பட்டன.

மற்றொரு சண்டைக் காட்சியை பிரசாத் ஸ்டூடியோவில் 20 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, விக்ரமைவில்லன்களுடன் மோதவிட்டு ஸ்டில் காமிராக்களில் பதிவு செய்தார்கள். பின்பு இதை பிலிமுக்கு மாற்றி,தியேட்டரில் பார்க்கும்போது புதுமையாக இருக்கும் வகையில் கொண்டு வருவார்களாம்.

இப்படி தயாரிப்பு செலவு எகிறுவதைப் பார்த்து அதிர்ந்து போன தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், படத்தை ரூ.29கோடிக்கு இன்ஷ்யூர் செய்துள்ளார். இந்தியாவிலேயே, அமீர்கானின் ரைசிங் படத்திற்குப் (ரூ.33 கோடி) பிறகுஅதிக ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்யப்பட்டிருப்பது அந்நியன்தானாம்.

இப்படி படத்தின் பிரம்மாண்டம் பற்றி ஏராளமான செய்திகள் இருக்க, சோகமான செய்திகளும் ஏராளமாகஉள்ளன. படம் ஆரம்பித்ததிலிருந்து விபத்து மேல் விபத்துகள் வந்த வண்ணம் உள்ளன. சதாவிற்கு இரண்டுதடவை விபத்து, இரண்டு தடவை சண்டைக்கலைஞர்களுக்கு விபத்து நேர்ந்தது.

இப்போது, ராம் படத்தால் புதிதாக ஒரு குழப்பத்தில் சிக்கியிருக்கிறார் ஷங்கர்.

ராம் படத்தின் கதையும், அந்நியன் கதையும் ஒன்று என்று செய்தி கிளம்பியுள்ளதால் ஷங்கர் அடைந்தகுழப்பம்தான் இது.

ஜீவா, கஜாலா நடிக்க அமீர் (மெளனம் பேசியதே புகழ்) இயக்கத்தில் உருவாகி வருவது ராம். அந்நியனுக்குமுன்பே பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட படம்.

இந்தப் படத்தின் கதையும், அந்நியன் கதையும் ஒரே மாதிரியானது என்று ஷங்கர் காதிலும், அமீர் காதிலும்கோலிவுட்காரர்கள் போட்டுள்ளார்கள். இதில் அதிக ஷாக் அடையாதவர் அமீர்தான். காரணம், நான்தான் முதலில்படம் எடுக்க ஆரம்பித்தேன். எனவே ஷங்கர்தான் இதுகுறித்து கவலைப்பட வேண்டும் என்று கூலாக கூறிவருகிறாராம் அமீர்.

அமீர் சொன்னபடி ஷங்கர்தான் கொஞ்சம் அப்செட் ஆகி விட்டாராம். இருந்தாலும் விக்ரம் இருப்பதால் படத்தைபிரச்சினையின்றி ஓட்டி விடலாம் என்று நம்புகிறாராம்.

இப்படித்தான் துள்ளுவதோ இளமைக்கு முன்பு யோசித்த கதையை வைத்து பாய்ஸ் படத்தை ரிலீஸ் செய்தார். படம்ஊத்திக் கொண்டதுடன், கடும் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியதாயிற்று. ஆனால் துள்ளுவதோ இளமையோசக்கை போடு போட்டு புது டிரண்டையும் உருவாக்கியது.

ஷங்கர் கவலையில் நியாயம் இல்லாமல் இல்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil