twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாளிகளை மிரட்டும் தமிழ்ப் படங்கள்! கேரள சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு பெரும் சவால் விடும் வகையில் இரண்டு தமிழ்ப் படங்கள் கேரளாவில் சக்கை போடுபோட்டுக் கொண்டிருக்கின்றன. மலையாளப் படங்களுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. ஆனால் மலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்குதினசரி ஏதாவது ஒரு அழகு மயில் இறக்குமதியாகிக் கொண்டு கோலிவுட்டைக் கலக்கி வருகின்றன. நயன்தாரா, அசின், நவ்யா நாயர், சந்தியா , ஸ்ரீதேவிகா என மலையாள நடிகைகள் தான் தமிழ்ப் படங்களில் சக்கை போடுபோட்டு வருகின்றனர். இவர்களோடு மும்பை குட்டிகளும் முட்டி மோதி தெறமை காட்டி வருகின்றனர். தமிழ் நாயகிகளுக்கு தமிழ்ப் படங்களில் பஞ்சம் இருந்தாலும் அதை வேறு விதத்தில் தமிழ்ப் படங்கள் ஈடு கட்டி வருகின்றன.தமிழில் தயாராகும் பல படங்கள் வெளி மாநிலங்களில் முத்திரை பதித்து வசூலில் கலக்கி வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகாவின் நடிப்பில் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருக்கும் சந்திரமுகி கர்நாடகத்திலும் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. அதேபோல இப்போது கேரளாவிலும் சந்திரமுகி வசூலில் சாதித்துக் கொண்டுள்ளதாம். கேரளாவில் மலையாளப் படங்களுக்குஅடுத்தபடியாக தமிழ்ப் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. மலையாளிகள் அனைவருமே தமிழ்ப் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பாஷை ஓரளவு புரியும் என்பதால்மட்டுமல்ல, தமிழ்ப் படங்களின் இனிமையான பாட்டுக்கள், நடனங்கள் மலையாளிகளின் பேவரைட்டாக உள்ளன. மலையாளப் பாடல்களுக்கு இணையாக தமிழ்ப் பாடல்களும் கேரளாவில் அதிகம் கேட்கப்படுவது வழக்கமான விஷயம்.இப்போது சந்திரமுகிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களை விட அதிகமாகஇருக்கிறதாம். சந்திரமுகியைப் போல இன்னொரு படமும் இப்போது அங்கு பெரும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுஷங்கரின் அந்நியன். விக்ரம் ஏற்கனவே பல மலையாளப் படங்களில் நடித்தவர். தமிழில் அவருக்கு மார்க்கெட் இல்லாத ஆரம்ப காலத்தில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நிறைய மலையாளப் படங்களில்நடித்துள்ளார் விக்ரம். இப்போது தமிழின் முன்னணி ஸ்டாராகி விட்ட விக்ரமுக்கு கேரளாவிலும் செல்வாக்குஅதிகரித்துள்ளது. சந்திரமுகியும், அந்நியனும் வசூலை மாறி மாறி வாரிக் குவித்து வருவதால் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி,மோகன்லால், திலீப் உள்ளிட்டோரின் படங்கள் அங்கு சரியாக ஓடவில்லையாம். தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், இரண்டு தமிழ்ப் படங்கள் கேரளாவையேஆட்டிப்படைத்து வருவதால் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஆடிப் போயுள்ளார்களாம். இரு படங்களும் நேரடியாக தமிழிலேயேஅங்கு திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு எப்போதுமே கேரளாவில் நல்ல வரவேற்பு உண்டு. அவருக்கு அடுத்து கமல்ஹாசனுக்குத் தான் கேரளாவில் மவுசுஅதிகம். இப்போத அந்த வரிசையில் விக்ரமும் சேர்ந்துள்ளார். மம்முட்டி நடித்த தொம்மனும் மக்களும் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கில் (மஜா) தான் விக்ரம் நடிக்கவுள்ளார். இதில்அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அசின். இந்தப் படம் கேரளாவில் வசூலை வாரிக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதேஏற்பட்டு விட்டது. கலக்குங்க ராசாக்களா!

    By Staff
    |

    கேரள சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு பெரும் சவால் விடும் வகையில் இரண்டு தமிழ்ப் படங்கள் கேரளாவில் சக்கை போடுபோட்டுக் கொண்டிருக்கின்றன.

    மலையாளப் படங்களுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. ஆனால் மலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்குதினசரி ஏதாவது ஒரு அழகு மயில் இறக்குமதியாகிக் கொண்டு கோலிவுட்டைக் கலக்கி வருகின்றன.

    நயன்தாரா, அசின், நவ்யா நாயர், சந்தியா , ஸ்ரீதேவிகா என மலையாள நடிகைகள் தான் தமிழ்ப் படங்களில் சக்கை போடுபோட்டு வருகின்றனர். இவர்களோடு மும்பை குட்டிகளும் முட்டி மோதி தெறமை காட்டி வருகின்றனர்.

    தமிழ் நாயகிகளுக்கு தமிழ்ப் படங்களில் பஞ்சம் இருந்தாலும் அதை வேறு விதத்தில் தமிழ்ப் படங்கள் ஈடு கட்டி வருகின்றன.தமிழில் தயாராகும் பல படங்கள் வெளி மாநிலங்களில் முத்திரை பதித்து வசூலில் கலக்கி வருகின்றன.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகாவின் நடிப்பில் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருக்கும் சந்திரமுகி கர்நாடகத்திலும் வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

    அதேபோல இப்போது கேரளாவிலும் சந்திரமுகி வசூலில் சாதித்துக் கொண்டுள்ளதாம். கேரளாவில் மலையாளப் படங்களுக்குஅடுத்தபடியாக தமிழ்ப் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.


    மலையாளிகள் அனைவருமே தமிழ்ப் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பாஷை ஓரளவு புரியும் என்பதால்மட்டுமல்ல, தமிழ்ப் படங்களின் இனிமையான பாட்டுக்கள், நடனங்கள் மலையாளிகளின் பேவரைட்டாக உள்ளன.

    மலையாளப் பாடல்களுக்கு இணையாக தமிழ்ப் பாடல்களும் கேரளாவில் அதிகம் கேட்கப்படுவது வழக்கமான விஷயம்.இப்போது சந்திரமுகிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களை விட அதிகமாகஇருக்கிறதாம்.

    சந்திரமுகியைப் போல இன்னொரு படமும் இப்போது அங்கு பெரும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுஷங்கரின் அந்நியன். விக்ரம் ஏற்கனவே பல மலையாளப் படங்களில் நடித்தவர்.

    தமிழில் அவருக்கு மார்க்கெட் இல்லாத ஆரம்ப காலத்தில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நிறைய மலையாளப் படங்களில்நடித்துள்ளார் விக்ரம். இப்போது தமிழின் முன்னணி ஸ்டாராகி விட்ட விக்ரமுக்கு கேரளாவிலும் செல்வாக்குஅதிகரித்துள்ளது.

    சந்திரமுகியும், அந்நியனும் வசூலை மாறி மாறி வாரிக் குவித்து வருவதால் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி,மோகன்லால், திலீப் உள்ளிட்டோரின் படங்கள் அங்கு சரியாக ஓடவில்லையாம்.

    தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், இரண்டு தமிழ்ப் படங்கள் கேரளாவையேஆட்டிப்படைத்து வருவதால் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஆடிப் போயுள்ளார்களாம். இரு படங்களும் நேரடியாக தமிழிலேயேஅங்கு திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஜினிக்கு எப்போதுமே கேரளாவில் நல்ல வரவேற்பு உண்டு. அவருக்கு அடுத்து கமல்ஹாசனுக்குத் தான் கேரளாவில் மவுசுஅதிகம். இப்போத அந்த வரிசையில் விக்ரமும் சேர்ந்துள்ளார்.

    மம்முட்டி நடித்த தொம்மனும் மக்களும் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கில் (மஜா) தான் விக்ரம் நடிக்கவுள்ளார். இதில்அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அசின். இந்தப் படம் கேரளாவில் வசூலை வாரிக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதேஏற்பட்டு விட்டது.

    கலக்குங்க ராசாக்களா!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X