»   »  மீண்டும் விக்ரமன்-ஆர்.பி. செளத்ரி

மீண்டும் விக்ரமன்-ஆர்.பி. செளத்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில்வர் ஜூப்ளி இயக்குநர் என்று கோலிவுட்டில் செல்லமாக அறியப்பட்ட விக்ரமன், மீண்டும் சூப்பர் குட் பிலிம்ஸுடன் இணைகிறார்.

வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்து அசத்தியவர் விக்ரமன். படு எளிமையான கதை, அழகான திரைக்கதை, சாதாரண நடிகர், நடிகைகள், மென்மையான இசையுடன் தென்றல் போன்ற பாடல்களுடன் அழகான பல படங்களைக் கொத்தவர் விக்ரமன்.

அவரது இயக்கத்தில் உருவான பூவே உனக்காக, சூரிய வம்சம், வானத்தைப் போல உள்ளிட்ட பல படங்களை விக்ரமனின் மைல் கல் படங்களாக கூறலாம். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இத்தனை படங்களையும் தயாரித்தது ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

ஆர்.பி.செளத்ரியின் புது வசந்தம் மூலமாகத்தான் தனது திரை வாழ்வைத் தொடங்கியவர் விக்ரமன். புது வசந்தம், விக்ரமனுக்கு புத்தம் புது வசந்தத்தைக் கொடுத்தது.

மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான ப்ரியமான தோழி படத்தில்தான் முதன் முதலாக தோல்வியைச் சுவைத்தார் விக்ரமன். அதன் பின்னர் தமிழில் 3ஆண்டுகள் படம் எதையும் இயக்காமல் அமைதி காத்தார்.

தெலுங்கில் மட்டும் ஒரு படம் மட்டும் செய்த விக்ரமனை கலைப்புலி தாணு தான் மீண்டும் கூட்டி வந்து சென்னை காதல் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

பரத், ஜெனீலியா நடிப்பில் உருவான இப்படமும் விக்ரமனுக்குப் பெரும் தோல்வியைக் கொடுத்து விட்டது.

இதனால் மனிதர் ப்செட் ஆகி விட்டார் விக்ரமன். மறுபடியும் ஒரு உறை பனிக்காலம் அவரது திரை வாழ்க்கையில் தொடங்கியது. ஆனால் இந்த முறை ஆர்.பி.செளத்ரி அதற்கு விடை கொடுக்க விரைந்து வந்துள்ளார்.

விக்ரமனுக்காக ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார் செளத்ரி. இதில் செளத்ரியின் மகனும், படத்துக்குப் படம் அசத்திக் கொண்டிருப்பவருமான ஜீவா நடிக்கவுள்ளார்.

விரைவில் பட பூஜை நடைபெறவுள்ளது. ஜீவா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ராமேஸ்வரம், தமிழ் எம்.ஏ ஆகிய இரு படங்களையும் முடித்து விட்டு வந்த பின்னர் விக்ரமனின் படம் தொடங்கவுள்ளதாம்.

வெளுத்துக் கட்டுங்க விக்ரமன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil