»   »  பொண்ணு வேணுமா, ஜின்னு வேணுமா

பொண்ணு வேணுமா, ஜின்னு வேணுமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கம் ஏரியா குத்துப் பாட்டுக்கு கும்மாக பாடிய ஷோபா சந்திரசேகரன் தனது சகோதரி மகன் (விஜய்யின் சித்தி மகன்) விக்ராந்த்துடன் இணைந்து ஒரு அசத்தலான கும்மாங்குத்துப் பாட்டைப் பாடியுள்ளார்.

அச்சு அசல் விஜய் போலவே இருப்பதால், விஜய்யின் சித்தி பையன் விக்ராந்த்தும் நடிகராகி விட்டார் (அல்லது ஆக்கப்பட்டு விட்டார்). விஜய் போலவே ஒரு கோணல் சிரிப்பு, விரலைப் பார்த்தபடி ஒரு வெறிச் பார்வை, தொள தொள பேகி பேன்ட், அந்த பேன்ட் பைக்குள் கையை விட்டபடி, கண்களில் கூலிங் கிளாஸுடன் ஸ்டைல் பார்வை என அப்படியே அண்ணாத்தையைக் காப்பி அடித்து போஸ் கொடுக்கிறார் விக்ராந்த்.

நடித்த முதல் படமான கற்க கசடற, கவிழ்த்து விட்டு விட, அடுத்தடுத்து சில படங்களில் புக் ஆனார் விக்ராந்த். ஆனால் எதுவும் இன்னும் பொட்டியை விட்டு வரவில்லை. ஆனால் விக்ராந்த் குறித்த செய்திகளுக்கு மட்டுமே பஞ்சமே இருப்பதில்லை.

கூட நடிக்கும் ஹீரோயின்களுடன் கடலை போடுவதில் விக்ராந்த் வில்லங்கமானவராம். கூடி உட்கார்ந்து கும்மியடித்து கலக்குகிறாராம் விக்ராந்த்.

விக்ராந்த் இப்போது நடித்து வரும் படம் முதல் கனவே. வழக்கம் போல இந்தப் படமும் ஆமை போல படு வேகமாக நகர்ந்து வருகிறது.

படத்தின் முக்கிய அம்சமே ஹீரோயின் ஹனி ரோஸ்தான். படு ஷோக்காக இருக்கும் ஹனி, கேரளத்து தேனீ. ஜில்லென்று இருக்கும் ஹனி, இனி, கோடம்பாக்கத்தின் விருப்ப நாயகியாக மாறக் கூடும். அந்தளவுக்கு படு விசேஷமாக இருக்கிறார் ரோஸ் பாப்பா.

இப்படத்தில் ஒரு விசேஷம் உள்ளது. மகன் விஜய் படத்தில் அவருக்காக குத்துப் பாட்டைப் பாடியுள்ள தாயார் ஷோபா சந்திரசேகரன், இப்படத்தில் விஜய்யின் கசின் பிரதர் விக்ராந்த்துடன் இணைந்து ஒரு குத்துப் பாட்டைப் பாடியுள்ளாராம்.

பீரு வேணுமா, பிராந்தி வேணுமாபொண்ணு வேணுமா, ஜின்னு வேணுமா என இந்தப் பாட்டு ஆரம்பிக்கிறது.

பெரியம்மாவுடன், இணைந்து பாடிய அனுபவத்தைக் கேட்டால், அய்யோ, ரொம்ப தயக்கமா இருந்துச்சு முதலில். ஆனால் பெரியம்மாதான் ஊக்கம் கொடுத்த பாட வைச்சாங்க. அவங்க குரலுக்கு நான் சின்ன வயதிலிருந்தே விசிறி என்று பெருமையாக கூறுகிறார் விக்ராந்த்.

அம்மாவும், புள்ளையும் சேர்ந்து பாடுகிற பாட்டாப்பா இது, ஹய்யோ ஹய்யோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil