»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை விந்தியாவுடன் தனி வீட்டில் தங்கியிருக்கும் அவரது மேனேஜர் அருண் என்ற அருணகிரிக்கு சென்னைஉயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

நடிகை விந்தியாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்அவர் திருவான்மியூரில் தனி வீடு பார்த்து தனது மேனேஜர் அருணுடன் குடியேறி விட்டார்.

இதைத் தொடர்ந்து தனது மகளை அருண் கடத்திச் சென்று வைத்துள்ளதாக போலீஸ் நிலையத்தில் விந்தியாவின்பெற்றோர் புகார் கொடுத்தனர்.

ஆனால், திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் முன் வியாழக்கிழமை ஆஜரான விந்தியா,தன்னை யாரும் கடத்தவில்லை, மேனேஜருக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை. பெற்றோர் என்னை தவறாகநடத்த முயன்றதால் அவர்களிடமிருந்து வெளியேறினேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

இந் நிலையில் விந்தியாவின் மேனேஜர் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.அதில், தன் மீது விந்தியாவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், தான் எந்த நேரம்கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் முன் ஜாமீன் தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், அருணகிரிக்கு ரூ. 10,000க்கு சொந்த ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

Read more about: actress, cinema, films, movies, songs, tamilnadu, vindhya
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil