»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை விந்தியாவை அவரது மேனேஜரே கடத்திச் சென்று விட்டதாக அவரது வீட்டினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

சங்கமம் படத்தில் அறிமுகமானவர் நடிகை விந்தியா. திருப்பதியைச் சேர்ந்த விந்தியா சென்னையில் தனது பெற்றோருடன் தங்கி படங்களில்நடித்து வருகிறார். இந் நிலையில் விந்தியாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திங்கள்கிழமை அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது மேனேஜர் அருண் உதவியுடன் திருவான்மியூரில் வீடுபார்த்து குடியேறினார். பின்னர் தனது தந்தை யோகானந்த் மற்றும் தாயார் ஹேமலதா ஆகியோர் மீது போலீஸில் புகார் கொடுத்தர்.

அந்தப் புகாரில் பணத்துக்காக எனது பெற்றோர் என்னைக் கொடுமைப்படுத்தி வந்தனர். என்னைக் கேவலமான முறையில் பயன்படுத்தவும்திட்டமிட்டுள்ளனர். இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில், விந்தியாவின் பெற்றோர் அருண் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், விந்தியா இன்னும் மைனர்தான்.அவரை மேனேஜர் அருண் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றுள்ளார். எனவே விந்தியாவை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே தான் மேனேஜர் அருணைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று விந்தியா கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil