»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

வயசுப் பசங்க என்ற படத்தில் பசங்களைக் கெடுக்கும் ஒரு மாதிரி பெண்ணாக விந்தியா நடிப்பதை நாம்ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

இந்தப் படத்தில் லில்லி மற்றும் பாயல் என்ற படு கிளாமர் பெண்களை அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் பாரதிக்கண்ணன்.

எப்போதும் நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக இருக்கும் பாரதிக் கண்ணன், கண்ணாத்தாள்,பண்ணாரி அம்மன், தாயே புவனேஸ்வரி என 6 கிராபிக்ஸ் பக்திப் படங்களை எடுத்துள்ளார்.

முதலில் எடுத்த படங்கள் ஓடினாலும் கடைசி இரு படங்களும் தியேட்டர்களுக்குப் போன வேகத்தில் பெட்டிக்கேதிரும்பி வந்துவிட்டன.

இதனால் ரூட்டை மாற்றிக் கொண்டு வயசுப் பசங்க படத்தை எடுத்து வரும் பாரதிக் கண்ணன், இதில் லில்லி,பாயல் தவிர அனுஷ், ஜெய் அரவிந்த் என இரு புது பசங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

ஏன் சார் சாமி படங்களை ஒரேயடியாய் விட்டுட்டு இப்படி துள்ளவதோ இளமை ரேஞ்சுக்கு பாதை மாறிட்டீங்கஎன்று டைரக்டரிடம் கேட்டால்,

தம்பி, இப்போவெல்லாம் பொம்பளைக தியேட்டருக்கே வர்றதில்லை. வயசுப் பசங்க தான் வர்றாங்க.அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் எடு, ஓட்டிக் காட்றேன்னு திருநெல்வேலி தியேட்டர் அதிபர் ஒருத்தர்சொன்னார்.

கோலிவுட்டே பாதை மாறிப் போச்சு, அதான் நானும் மாறிட்டேன் என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil