»   »  விந்தியாவின் 'கன்னி நிலா'

விந்தியாவின் 'கன்னி நிலா'

Subscribe to Oneindia Tamil
Vindhya
பல வருடங்களுக்கு முன்பு விந்தியா நடித்த கன்னிநிலா என்ற திரைப்படம் தூசு தட்டி மீண்டும் திரைக்கு வர தயாராகிக் கொண்டுள்ளது. இந்தச் செய்தி வெளியாகியே ஒரு வருடம் ஆகப் போகும் நிலையில் இப்போது உண்மையிலேய முழு மூச்சில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.

சங்கமம் படத்தில் கதாநாயகியாக வந்த விந்தியா மிக விரைவிலேயே செகண்ட் ஹீரோயின், ஒரு பாட்டுக்கு டான்ஸ், விவேக்குக்கு ஜோடி, டிவி சீரியல் என்று வளர்ந்தார். பின்னர் அதுவும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்து குண்டானார்.

விந்தியா சில வருடங்களுக்கு முன் கன்னி நிலா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் படப்பிடிப்பின் போது தன்னை யூனிட்டைச் சேர்ந்த ஒருவர் கற்பழிக்க முயன்றார் என்று விந்தியா புகார் செய்ததால் அத்துடன் படப்பிடிப்பு நின்று போனது.

பின்னர் முட்டி மோதி நகர்ந்தது அந்தப் படம். ஒரு வழியாய் சூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டாலும் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் அதை தூசு தட்டி ரிலீஸ் ெசய்ய முயன்றனர். அதுவும் பாதியில் கைவிடப்பட்டுவிட்டது.

இந் நிலையில் இப்போது சீரியசாகவே படத்தை திரைக்குக் கொண்டு வர முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டுள்ளன.

படத்தை பெயரை மாற்றி விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம் கன்னி நிலா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil