»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்கில் சிக்கியதோடு, வீட்டிலேயே முடங்கிக் கிடந்த வினிதா, "ஒரு தென்றல் புயலாகி வருதே... என்றுபாடாத குறையாக ரீ–என்ட்ரிக்கு தயாராகிவிட்டார்.

"காதலே ஜெயம் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் வினிதா. மற்றொரு நாயகிப்ரீத்தி ஷர்மா.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதுபோல, கதாநாயகர்களும் இருவர். காதல் கொண்டேன் படத்தில்செகண்ட் ஹூரோவாக நடித்த சுதீப் ஒரு கதாநாயகனாகவும், இன்னொரு கதாநாயகனாக புதுமுகம் நடராஜ்என்பரும் நடிக்கிறார்கள்.

நடிப்பதோடு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் என வேலைகளையும்நடராஜே கவனிக்கிறார்.

இளைஞர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாக வைத்து இளமை துள்ள படத்தை எடுத்து வருகிறார்களாம்.வடிவேலு, ஓ.ஏ.கே.சுந்தர், வெண்ணிற ஆடை மூர்த்தி, அனுமோகன், சேதுவிநாயகம், வடிவுக்கரசி, தேனிகுஞ்சாரம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தப் படம் தவிர வேறு வாய்ப்புக்களும் கேட்டு சரத்குமார் உள்ளிட்ட தன் பழைய ஹீரோக்களை சந்தித்துநச்சரித்து வருகிறார் வினிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil