»   »  என்கெளண்டர் விஷால்-நயனதாரா

என்கெளண்டர் விஷால்-நயனதாரா

Subscribe to Oneindia Tamil

தமிழில் அவ்வப்போது எண்கெளன்டர் போலீஸ் கதைகள் வந்து பெரும் வெற்றி பெறுவது உண்டு. அந்த வகையில் விஷாலும் துப்பாக்கியை எடுக்கிறார்.

அதுவும் ஒன்லி என் கவுண்டர் அதிகாரியாக மட்டும் தானாம்.

ரஜினியின் பல படங்களை வெற்றிகரமாக இயக்கி கடைசியில், பாபா என்ற மெகா பிளாப் படத்தை தந்து ரஜினிக்கே அதிர்ச்சி தந்தவர் சுரேஷ் கிருஷ்ணா. இவரிடம் உதவி டைரக்டராக இருந்த ராஜசேகர் இப்போது புதிதாக டைக்டராகிறார்.

இவர் இயக்கப் போகும் படத்தின் பெயர் சத்யம். விஷால் தான் கதாநாயகன். இதில் என்கெளண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் விஷால்.

இதற்காக தமிழக போலீசின் மிகச் சிறந்த அதிகாரிகளில் ஒருவரான சைலேந்திரபாபுவிடம் ஸ்பெஷலாக பயிற்சி எடுத்தாராம் விஷால். காக்க.. காக்க.. படத்துக்காக இவரிடமும் விஜய்குமாரிடமும் டிப்ஸ் பெற்றனர் இயக்குனர் கெளதமும் நடிகர் சூர்யாவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அடுத்த ஹீரோவும் நல்ல போலீஸ் அதிகாரியாக நடிக்க ஆசைப்பட்டு தன்னிடம் வந்ததால் மிகுந்த அக்கறை எடுத்து விஷாலுக்கு சில வாரங்கள் பயிற்சி தந்தாராம் சைலேந்திர பாபு.

இந்த படத்தில் கன்னட கதாநாயகன் உபேந்திரா முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

உபேந்திராவுக்கு ஏற்கனவே தமிழில் சில ஆபர்கள் வந்தன. ஆனால் அவர் எதையும் ஏற்கவில்லை. ஆனால் சத்யம் படத்தின் கதையையும் தனது கேரக்டரையும் விசாரித்த உபேந்திரா உடனே ஒப்புக் கொண்டுவிட்டாராம்.

படத்தில் விஷாலுக்கு ஜோடி போடுவது நயனதாரா. அதென்னவோ தெரியவில்லை. விஷால் என்றாலே மலையாள ஹீரோயின்கள் வரிசை கட்டி வந்துவிடுகின்றனர் (ரீமா சென் தவிர).மீரா ஜாஸ்மீன், பானு ஆகிய மலையாள மயில்களுடன் நடித்துவிட்ட விஷால் இப்போது நயனதாராவுடன் ஜோடி சேருகிறார். இதில் நயன்சுக்கு நிருபர் வேடமாம். அப்படியே விஷாலை விரட்டி விரட்டி காதலிக்கவும் செய்கிறாராம்.

சத்யம் படத்தின் முதல் கட்ட சூட்டிங் முடிந்து செகண்ட் ஷெட்யூலுக்குப் போய்விட்டனர். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதைத் தவிர மலைக்கோட்டை என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். இதில் அவருக்கு ப்ரியாமணி தான் ஜோடி என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்தப் படத்தை பூபதி பாண்டியன் டைரக்டு செய்கிறார். இவர் தான் தென்னகத்து புரூஸ்லி (அதாங்க நம்ம தனுசு) நடித்த தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் படத்தை ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர். இதில் ஏய் ஆத்தா ஆத்தோரம்மா வர்றியா பாடலை ரீமிக்ஸ் செய்து ஒரு கும் கும் ஆட்டத்தை ரெடி செய்திருக்கிறார்களாம்.

செல்லமே, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என வரிசையாக ஹிட் கொடுத்துள்ள விஷால் இந்த இரு படங்களையும் மிக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil