»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

விவேக்கிற்கு கல்தா கொடுக்கும் வேலை கோலிவுட்டில் தொடங்கி விட்டதாம்.

வர வர விவேக் பண்ணும் பந்தாவிற்கும், அலப்பறைக்கும் அளவே இல்லாமல் போய் விட்டதால்நொந்து போன சில தயாரிப்பாளர்கள் விவேக்கை மாற்றும் முடிவுக்கு வந்து விட்டார்கள்.

பாப்கார்ன் படத்தில் நாசரிடம் விவேக் கடுப்படித்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தனதுபெருந்தன்மை காரணமாக, விவேக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் நாசர்.

அதேபாணியில் மேலும் சிலரிடம் டார்ச்சர் பண்ணியுள்ளார் விவேக். இதனால் கடுப்பாகிப் போனஅவர்கள் விவேக்கைத் தூக்கி விட்டு கருணாஸை புக் பண்ணி விட்டனர். விவேக் இல்லாதபடங்களில் எல்லாம் இப்போது கருணாஸ்தான் நடித்து வருகிறாராம்.

முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், பிரசாந்த், சூர்யா ஆகியோரின் படங்களில் முன்பு தொடர்ந்துநடித்து வந்த விவேக், அவர்களையே அடுத்தடுத்த படங்களில் கிண்டலடித்து நடிக்கப் பாய்அவர்களது படங்களில் விவேக்க்கு இப்போதெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.

சின்னக் கலைவாணர் என்ற பட்டம் மட்டும் பெற்றால் போதாது, அதற்கேற்ப நடந்து கொள்ளவும்வேண்டும் என்கிறார்கள் இவரால் நொந்த சில தயாரிப்பாளர்கள்.

ஆனால், விவேக்கின் இடத்தை கருணாஸை வைத்து இவர்களால் நிரப்பிவிட முடியுமா என்றுதெரியவில்லை.

இன்னும் காமெடிக்கோ ஐடியாவுக்கோ அவரிடம் பஞ்சம் ஏற்பட்டதாகத்தெரியவில்லை. வரும் எல்லா படங்களிலும் ஹீரோவுக்கு இணையாகப் பேசப்பட்டுவிடுகிறார்விவேக்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil