Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
மனைவியிடம் கேட்ட கேள்வி.. செருப்பை காட்டிய மனைவி.. அருண் விஜய் வாழ்வில் நடந்த பகீர் சம்பவம்!
சென்னை: நடிகர் அருண் விஜய், நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள யானை திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
தற்போது யானை படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடு பட்டு வருகிறார் நடிகர் அருண் விஜய்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தன் மனைவியிடம் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார்.
முருகா...யானையை
காப்பாத்துப்பா...தீயாய்
பரவும்
அருண்
விஜய்
போட்டோஸ்

பல படங்கள்
முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தான் அருண் விஜய். அதன்பிறகு பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, கண்ணால் பேசவா, போன்ற பல படங்களில் நடித்திருந்தார் அருண் விஜய். இந்த படங்களுக்கு பிறகு இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த படம் தான் பாண்டவர் பூமி. குடும்பப்பாங்கான இந்த படம் இவரது வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. இயக்குநரும், நடிகருமான சேரன் எழுதி, இயக்கிய இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், ரஞ்சித், விஜயகுமார், சமிதா போன்ற பலர் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையில் இப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

வில்லனாக அருண் விஜய்
பாண்டவர் பூமி படத்திற்கு பிறகு தவம், வேதா, மலை மலை, துணிச்சல், மாஞ்சா வேலு, தடையறத் தாக்க போன்ற பல படங்களில் நடித்தார்.
விமர்சன ரீதியான இந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும். இவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது . கௌதம் மேனன் எழுதி, இயக்கிய இந்த திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, அனுஷ்கா போன்ற பலரும் நடித்திருந்தனர். அருண் விஜய் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடிப்புக்காக சிறந்த வில்லனுக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

ஏற்ற கதைகள்
தனக்கேற்ற கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருண் விஜய். குற்றம் 23, செக்கச் சிவந்த வானம் போன்ற சில படங்கள் மட்டுமே செலக்டிவாக நடித்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் யானை திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கும் யானை திரைப்படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் அருண்விஜய் மலேசியா சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. பல கோயில்களுக்கு சென்று அங்கிருக்கும் யானைகளிடம் ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.யானை படத்திற்குப் பிறகு அருண் விஜய் அக்னி சிறகுகள், பாக்சர், சினம் போன்ற பல படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எதிர்பார்த்த வாழ்க்கை
நடிகர் அருண் விஜய் ஆர்த்தி என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை கூறியுள்ளார் அருண் விஜய். அவர் கூறியிருப்பதாவது ," முதன் முதலில் தன் மனைவியை பார்க்கும் பொழுது எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போட்டுருக்க என்று கேட்டுள்ளார். இதைக் கேட்ட அவரது மனைவி நீங்களே பாத்துக்கோங்க என்று செருப்பை காட்டியுள்ளார். தன் மனைவி ஆர்த்தி கொஞ்சம் ஷார்டாக தான் இருப்பார் என்றும், அவர் உயரத்திற்கும் அவர் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது என்றும் கூறியுள்ளார் அருண் விஜய். தனக்கு வர வேண்டிய மனைவி சிம்ரன் போல் உயரமாகவும், உதட்டின் மேல் மச்சம் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்ததாகவும், தன் மனைவி பார்பி டால் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும் கூறியுள்ளார் அருண் விஜய். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் அவர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.