»   »  கபாலி.. தன்னம்பிக்கையும் கோபமும் மிக்க நல்ல டான்!

கபாலி.. தன்னம்பிக்கையும் கோபமும் மிக்க நல்ல டான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் கபாலி குறித்து அதன் இயக்குநர் பா ரஞ்சித் சமீபத்தில் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ..

‘கபாலி' படத்தில் ரஜினி தன்னம்பிக்கை நிறைந்த கோபக்கார டானாக நடித்திருக்கிறாராம். இப்படத்தில் இவருக்கு பஞ்ச் வசனங்களே கிடையாதாம். ஆனால், நெஞ்சை ஊடுருவும் நிறைய வசனங்களைப் பேசியிருப்பதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே இப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் தோட்டத் தொழிலாளி குமுதவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.


தன்ஷிகா

தன்ஷிகா

தன்ஷிகா, இப்படத்தில் ‘யோகி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த படத்துக்காக தனது தலைமுடி கெட்டப்பை மாற்றியிருக்கிறார். ரஜினிக்கு எதிராக சவால் விடுகிற தாய்லாந்து கேங்ஸ்டராக வருகிறாராம்.


கலையரசன்

கலையரசன்

கலையரசன், கேங்ஸ்டர் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்காக ரஜினி நடத்தி வரும் பள்ளியை நிர்வகிப்பவராக நடித்திருக்கிறாராம். படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் தமிழ் குமரன்.


தினேஷ்

தினேஷ்

அட்டக்கத்தி தினேஷ், இன்னொரு கேங்ஸ்டரின் மகன். ஆனால், ரஜினியின் ஸ்டைலால் கவரப்பட்டு கபாலியுடனே வலம் வருகிறாராம்.


ஜான் விஜய்

ஜான் விஜய்

இதுவரை காமெடி, வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஜான் விஜய், இந்த படத்தில் அமீர் என்ற கதாபாத்திரத்தில் கபாலியின் நண்பனாகவும், ஆலோசகராகவும் நடித்திருக்கிறாராம்.


வில்லன் கிஷோர்

வில்லன் கிஷோர்

கபாலியின் எதிரிகளாக கிஷோர், வின்ஸ்டன் சாவ் ஆகியோர் வருகிறார்கள். இதில் இரண்டாமவர் தைவான் நடிகர். அதேபோல், மலேசியா நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்களாம்.


English summary
Recently Director Pa Ranjith has shared some details on his Rajini starrer Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil