twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "இரும்புக்கை மாயாவி" ட்ராப் ஆனதுக்கு காரணம் நான்தான்.. லோகேஷ் கனகராஜ்

    |

    சென்னை : மாநகரம்,கைதி, மாஸ்டர் என தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் மிரட்டி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

    அடுத்ததாக தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் ஜூன் 3ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது

    இந்த நிலையில் உள்ள தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ் இரும்புக்கை மாயாவி திரைப்படம் ட்ராப் ஆனதுக்கு நான் மட்டும் தான் காரணம் என கூறியுள்ளார்.

    விஜய் அண்ணா படத்தை மிஸ் செய்ய விரும்பவில்லை.. அதனால் சில காம்ப்ரமைஸ் செஞ்சிக்கிட்டேன்.. லோகேஷ் பளீச் விஜய் அண்ணா படத்தை மிஸ் செய்ய விரும்பவில்லை.. அதனால் சில காம்ப்ரமைஸ் செஞ்சிக்கிட்டேன்.. லோகேஷ் பளீச்

    சிறந்த இயக்குநராக

    சிறந்த இயக்குநராக

    தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனராக உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் இப்பொழுது இந்திய அளவில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் மிகச் சிறந்த இயக்குநராக உயர்ந்துள்ளார். மாநகரம் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் அதை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி படம் வெற்றி பெற்றது.

    கைதி 2வது பாகம்

    கைதி 2வது பாகம்

    கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் வெளியான இந்த படத்தில் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலா எதுவுமே இருக்காது. கதாநாயகி,குத்து பாடல்கள் என எதுவுமே இல்லாமல் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட கைதி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த படம் சீனா மற்றும் ரஷ்ய மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. கைதி 2வது பாகம் கண்டிப்பாக வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் உறுதியாக கூறியுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். கைதி இப்பொழுது ஹிந்தியில் அஜய் தேவ்கான் இயக்கத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம்

    விக்ரம்

    இந்த நிலையில் தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இப்பொழுது இயக்கிவருகிறார். கமல்ஹாசன் எப்பொழுதும் தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய பங்கிற்கு சில அறிவுரைகளை கூறி படத்தை மெருகேற்ற உதவுவார். ஆனால் அது போன்று விக்ரம் படத்தில் எந்த ஒரு அறிவுரைகளையும் கூறவில்லை இது முழுக்க முழுக்க லோகேஷ் படமாக மட்டுமே வர வேண்டும் என்பதில் கமல்ஹாசன் மிக உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது .

    லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில்

    லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில்

    எனவே முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி மிக பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் தனியார் யுடியூப் சேனல் நேர்காணலில் பேசிய லோகேஷ் சூர்யாவின் நடிப்பில் தான் இயக்க இருந்த இரும்புக்கை மாயாவி படம் ட்ராப் ஆனதற்கு முழு காரணம் நான் மட்டும்தான் என கூறியுள்ளார்.

    இரும்புக்கை மாயாவி ட்ராப் ஆனதுக்கு காரணம் நான்தான்

    இரும்புக்கை மாயாவி ட்ராப் ஆனதுக்கு காரணம் நான்தான்

    மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகியிருந்த இரும்புக்கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ் ஆர் பிரபு அந்த கதையின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். மாநகரம் படத்திற்கு பிறகு எழுதிய மிகப்பெரிய கதை அது. இரும்புக்கை மாயாவிகாக எட்டு மாதம் வொர்க்கவுட் பண்ணிய பிறகு ஒரு நாள் எஸ்ஆர் பிரபுவிடம் சென்று சார் இந்த படம் என்னால பண்ண முடியாது. ஏன்னா இப்ப தான் மாநகரம்னு ஒரு குட்டி படம் பண்ணியிருக்கேன். இது ரொம்ப பெரிய படமா இருக்கு நான் தாங்குவேணான்னு எனக்கே தெரியல. இந்தப் படம் இயக்க முடியும்னு எனக்கு கான்பிடன்ஸ் இல்லை அப்புறம் பண்ணிக்கலாம் என நானே தான் அந்த படத்தில் இருந்து வெளியில் வந்தேன் எனவே இரும்புக்கை மாயாவி நடக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காரணம் நான்தான் என லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

    English summary
    Why Irumbukai movie droped at last instance says lokesh kangaraaj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X