twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லோகேஷ் கனகராஜ் படங்களில் ரெட்ரோ பாடல்கள் இடம் பெறுவதற்கான காரணம் இதுதான்... அவரே சொன்ன பதில்!

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் இப்பொழுது வான்டட் இயக்குனர் என்ற பெயரைப் பெற்றுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்

    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது

    லோகேஷ் தனது ஒவ்வொரு படங்களிலும் ரெட்ரோ பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தன்னுடைய படங்களில் ரெட்ரோ பாடல்கள் இடம் பெறுவதற்கான காரணத்தை தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    விஜய் – வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்...தளபதி 68 ஆ? தளபதி 69? விஜய் – வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்...தளபதி 68 ஆ? தளபதி 69?

    திரும்பிப் பார்க்க வைத்தார்

    திரும்பிப் பார்க்க வைத்தார்

    தனது வித்தியாசமான மேக்கிங் ஸ்டைல் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் எந்த இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணி புரியாமல் குறும்படங்கள் மூலம் இயக்குனர் ஆனவர் . மாநகரம் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த தமிழ் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

    முழுக்க முழுக்க ஆக்ஷன்

    முழுக்க முழுக்க ஆக்ஷன்

    அதைத் தொடர்ந்து இயக்கிய கைதி இந்திய அளவில் அனைவரையும் லோகேஷ் கனகராஜ் மீது பார்வை பட வைத்தது. நடிகர் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் வெளியான கைதி முழுக்க முழுக்க ஆக்ஷன் களத்தில் உருவானது..கைதி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதுடன் ரஷ்யா மற்றும் சீனா மொழிகளிலும் இந்த படம் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

    ஃபேன்பாய் சம்பவம்

    ஃபேன்பாய் சம்பவம்

    கைதியை கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அடுத்ததாக தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வந்தார். பெரும் எதிர்பார்ப்பில் ஃபேன்பாய் எப்படி கமல்ஹாசனை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பில் உருவாகி வந்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வரும் நிலையில் அடுத்ததாக யாருடன் இணைய உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்கிறது.

    Recommended Video

    Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood
    ரெட்ரோ பாடல்கள் ஏன்?

    ரெட்ரோ பாடல்கள் ஏன்?

    லோகேஷ் கனகராஜ் படங்களில் ஆக்ஷனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதேபோல 90 களில் வெளியான ரெட்ரோ பாடல்களும் ஒவ்வொரு படங்களில் இடம் பெற்று ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இப்போது அதற்கான காரணம் குறித்த தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ் 1990 இளையராஜா உச்சத்தில் இருந்தபோது, ஏ ஆர் ரகுமான் ஆரம்பமாகும் போது.. அப்பொழுது எனக்கு நான்கு வயது தான்... அப்போது வெளியான பாடல்களைக் கேட்டு வளர்ந்ததன் தாக்கம் தான் அது.. எனவே 90 களில் வெளியான ரெட்ரோ பாடல்கள் மீது எப்போதும் எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அந்த ஈர்ப்பின் காரணமாகத்தான் என்னுடைய படங்களில் ரெட்ரோ பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

    English summary
    Why Retro Songs Present in my Movies Says Director Lokesh Kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X