Just In
- 29 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 51 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ஹீரோவுக்கு மட்டும் ஏன் இவ்ளோ டிமான்ட்? எல்லா படமும் தமிழ்ல ரீமேக் ஆகுதே.. ஆனா அந்தப்படம் ஆகுமா?
சென்னை: பிரபல இந்தி ஹீரோ நடித்துள்ள படங்கள், தமிழில் தொடர்ந்து ரீமேக் செய்யப்பட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் தென்னிந்திய படங்களை இந்தியிலும் அங்குள்ள படங்களை இங்கும் ரீமேக் செய்வது வழக்கமானதுதான்.
தமிழ்ப் படங்கள் தெலுங்கிலும் அந்த மொழிப் படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

ஒக்கடு, கில்லி
இது காலங்காலமாக நடக்கும் விஷயம் என்றாலும் ஒரே ஹீரோவின் படங்கள் அதிகமாக ரிமேக் ஆவது குறைவு. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த சில ஹிட் படங்களை தமிழில் விஜய் ரீமேக் செய்து நடித்தார். அப்படித்தான் அவர் நடித்த ஒக்கடு, கில்லி ஆனது. போக்ரி, போக்கிரி ஆனது. ஆனால், தொடர்ந்து அவர் படங்களை ரீமேக் செய்யவில்லை.

நான்கு படங்கள்
இப்போது இந்தியில் அயுஷ்மன் குரானா நடித்துள்ள 4 படங்கள் தமிழில் தொடர்ந்து ரீமேக் ஆகின்றன. ஒரு படம் ரீமேக் ஆகிவிட்டது. அது துமாரி சுலு. இதில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்., அயுஷ்மன் குரானா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஜோதிகா, விதார்த் நடித்திருந்தனர்.

தாராள பிரபு
இதையடுத்து அயுஷ்மன் குரானா நடித்து இந்தியில் ஹிட்டான விக்கி டோனர், தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஒரிஜினலில் யாமி கவுதம் ஹீரோயினாக நடித்திருப்பார். இதில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். விவேக், தான்யா ஹோப் உட்பட பலர் நடிக்கின்றனர். கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.

பிரசாந்த் நடிப்பில்
அடுத்து இவர் நடித்து ஹிட்டான அந்தாதுன் படம் பிரசாந்த் நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. 'அந்தாதுனி'ல் அயுஷ்மன் குரானாவுடன் ராதிகா ஆப்தே, தபு உட்பட பலர் நடித் நடித்திருந்தனர். தமிழில் இதை மோகன் ராஜா இயக்குகிறார். உடல் எடையை படத்துக்காக பிரஷாந்த் குறைத்துள்ளார். படத்தை நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார்.

பதாய் ஹோ
இந்தப் படத்தை அடுத்து, பதாய் ஹோ படமும் ரீமேக் ஆகிறது. இதில் நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ், சுரேகா சிக்ரி உட்பட பலர் நடித்திருந்தனர். அமித் மிஸ்ரா இயக்கி இருந்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியுள்ளார். இதில் நடிகர் தனுஷை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஆர்டிகள் 15
அனுபவ சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா நடித்த 'ஆர்டிகள் 15, படமும் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம் இது. மதம், இனம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கும் வேறுபாட்டை 'ஆர்டிகள் 15' தடை செய்கிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் நடக்கும் கதை. இதன் தமிழ் ரீமேக்கில் யார் நடிக்கிறார் என்பது முடிவாகவில்லை.

ஓரினச் சேர்க்கையாளர்கள்
ஒரே இந்தி நடிகரின் நான்கு படங்கள், தொடர்ந்து தமிழில் ரீமேக் ஆவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் இப்போது நடித்துள்ள படம், 'சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான்'. ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதையான இந்தப் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை விதித்துள்ளனர். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை யாரும் வாங்குவார்களா என்பது சந்தேகமே.