நானும் ஆர்யாவும் சேர்ந்து கொழந்த பெத்துக்க முடியாது… எதனால் விஷால் இப்படி சொன்னார் தெரியுமா?
சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். தற்சமயம் லத்தி, துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கினுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக தானே துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நடிக்க வருவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் இவர் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தற்சமயம் விஷால் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தன்னைப் பற்றியும், தனது நெருங்கிய நண்பன் ஆர்யா பற்றியும் சில வேடிக்கையான பதில்களை தந்துள்ளார் விஷால்.

பாண்டியராஜனுடன் ஒப்பீடு
அந்தப் பேட்டியில் பல விநோதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இப்போது நீங்கள் உயரமாக இல்லாமல் இயக்குநர் பாண்டியராஜன் உயரத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டதற்கு, குனிந்தபடி வில்லன்களை அடிக்காமல் நிமிர்ந்து பார்த்தபடி அவர்களை பன்ச் செய்திருப்பேன். ஹீரோயின்ஸுடன் ரொமான்ஸ் செய்வதிலும் அதே யுக்தியைதான் கடைபிடிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆர்யாவும் விஷாலும் மட்டும்
இந்த உலகத்தில் அனைவரும் இறந்து நீங்களும் ஆர்யாவும் மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, கண்டிப்பாக நானும் அவனும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. பெண்கள் தன்னுடன் இல்லை என்றால் ஆர்யாவிற்கு கோபம் வந்து தன்னை கொன்றுவிடுவான். இல்லையென்றால் இருவரும் சேர்ந்து புதிய உலகத்தைத் தேடி அலைவோம் என்று விஷால் கூரியுள்ளார்.

தோஸ்தானா ரீமேக்
இந்தியில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தோஸ்தானா. அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள அந்தப் படத்தில் பிரியங்காவுடன் ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் வேண்டும் என்பதற்காக தாங்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று பொய் சொல்லி மூவரும் ஒரே வீட்டில் தங்குவார்கள். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யலாமா என்று ஆர்யாவும் விஷாலும் பேசியுள்ளனராம். ஏற்கனவே இவர்கள் அவன் இவன் மற்றும் எனிமி படங்களில் ஒன்றாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

யாருடன் லிப் லாக் செய்வீர்கள்
உங்கள் உயரத்திற்கும் வேவ் லெந்த்திற்கும் உங்களுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க எந்த ஹீரோயின் பொருத்தமாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, உயரத்தின் அடிப்படையில் முமைத் கான், கெமிஸ்ட்ரி அடிப்படையில் லஷ்மி மேனன் என்று விஷால் பதிலளித்தார். பெர்சனல் லைஃபில் யார் என்று ஆன்கர் மீண்டும் மீண்டும் கேட்க, உங்களுக்குத்தான் குடுப்பேன் என்று கூறி ஆன்கரின் வாயை மூடிவிட்டார் விஷால்.


Click it and Unblock the Notifications











