twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா?... பெண்களை ஊக்குவிக்கும் பாடல்கள்

    By Manjula
    |

    சென்னை: ஆண்களின் ஆதிக்கம் இருந்த காலத்திலும் பெண்களைப் போற்றி ஏராளமான படங்கள் தமிழ்த்திரையில் வெளியாகியுள்ளன.

    அதிலும் அவள் ஒரு தொடர்கதை முதல் 36 வயதினிலே வரை பெண்களை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் நிறையவே வந்துள்ளன.

    சுஜாதா, சுஹாசினி, ரேவதி படங்கள் தொடங்கி நேற்று வந்த ஜோதிகா படம் வரை பெண்களின் பெருமைகளை, ஆண்களின் மனதிலும் புகுத்திய பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

    கண்ணின் மணியே

    1987 ம் ஆண்டு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் சுஹாசினி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் மனதில் உறுதி வேண்டும். ஒரு குடும்பத்தை தூக்கி சுமக்கும் பெண்ணாக சுஹாசினி நடிப்பில் அசத்தியிருப்பார். கிட்டத்தட்ட 29 வருடங்களுக்கு முன் வெளியாகி பல பெண்களின் மனதில் உறுதியை ஏற்படுத்திய இப்படத்தில் இடம்பெற்ற கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா? ஒவ்வொரு வரியிலும் தெம்பூட்டி அநீதிகளுக்கு எதிராக பெண்களை போராடச் சொன்ன பாடலிது. குறிப்பாக இப்பாடலில் வரும் "உலகமெல்லாம் விடிந்த பின்னரும் உங்களின் இரவு விடியவில்லை" வரிகள் இன்றைய காலத்திற்கும் பொருந்திப் போவது வேதனையே.

    ஒரு தென்றல் புயலாகி

    இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி, பாண்டியன், பிரதாப் கே போத்தன் ஆகியோர் நடிப்பில் 1984 ம் ஆண்டு வெளியான படம் புதுமைப்பெண். கணவனைக் காப்பாற்றப் போராடி கடைசியில் அந்தக் கணவன் சந்தேகம் கொள்ள, அவனைத் தூக்கி எறிந்து விட்டு வீட்டை விட்டு வெளியில் வரும் புரட்சிப்பெண்ணாக இப்படத்தில் ரேவதி நடித்திருப்பார். இதில் இடம்பெற்ற 'ஒரு தென்றல் புயலாகி வருதே' பாடல் பெண்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். கால தேவனின் தர்ம எல்லைகள் என்று முழுதாக மாறப் போகிறதோ? தெரியவில்லை.

    ஆராரிராரோ

    ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடல் ஒரு தாய் மீதான மகனின் பாசத்தை வெளிபடுத்தும் பாடலாக அமைந்திருக்கும். மகனுக்கு தாலாட்டு பாடி தூங்க வைத்த தாய்களுக்கு, மத்தியில் அம்மாவுக்கு தாலாட்டு பாடிய இந்த மகனின் பாடல் வித்தியாசமாக அமைந்தது. ஜீவா, சரண்யா, கஞ்சா கருப்பு நடிப்பில் 2005 ம் ஆண்டு வெளியான ராம் படம் அமீர், ஜீவா,சரண்யா ஆகியோருக்கு சொல்லிக்கொள்ளும் படமாக அமைந்தது.

    ஒரு ஊரில் அழகே உருவாய்

    ஜோதிகா, சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த இப்படம் குறித்து நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கவுதம் மேனன் படங்களில் பெண்களை எப்போதுமே ஸ்பெஷலாக காட்டுவார். அதேபோல இப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு ஊரில் அழகே உருவாய்' பாடல் பெண்களின் அழகை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும். படத்தில் ஜோதிகாவின் அழகைத்தான் புகழ்ந்திருப்பார்கள் எனினும் ஆபாச வார்த்தைகள் துளியும் இடம்பெறாத இப்பாடல் எல்லாப் பெண்களுக்கும் பொருந்திப் போகின்ற பாடலே என்பதில் சந்தேகமில்லை.

    வாடி ராசாத்தி

    ஜோதிகா, ரகுமான் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 36 வயதினிலே. கணவன், மகள் புறக்கணிப்புகளை கண்டு சோர்ந்து விடாமல் தனது திறமைகளை வெளிக்கொணரும் பெண்ணாக ஜோதிகா நடித்திருப்பார். 36 வயதுக்கு மேல் வாழ்க்கை அவ்வளவு தான் என்று எண்ணும் பல பெண்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற வாடி ராசாத்தி பாடல் வாழ்க்கையில் மீண்டு வரும் பெண்களுக்கானது. குறிப்பாக இதில் இடம்பெற்ற 'திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு வாங்கி பூட்டி வைக்கும்', 'பொட்டப்புள்ள போக ஊரு பாதை போட்டு வைக்கும், முட்டுச்சந்து பார்த்து அந்த ரோடு போய் நிக்கும், படம் காட்டும் ஏமாத்தி' வரிகள் இந்தக் காலத்திலும் பெண்களின் திறமைகளை பூட்டி வைக்கும் அவல நிலையை எடுத்துரைக்கிறது.

    English summary
    Women's Day Special:Tamil Cinema Women's Motivational Songs List.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X