»   »  படமாகும் பாப் உல்மர்

படமாகும் பாப் உல்மர்

Subscribe to Oneindia Tamil

மர்மான முறையில் மரணமடைந்த முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மரின் கதையை இந்தியில் திரைப்படமாக எடுக்கவுள்ளனர்.

நிஜக் கதைகளை படமாக்குவதில் இந்தியர்கள் கில்லாடிகள் பூலான் தேவி, மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், அயோத்தியா குப்பம் வீரமணி என பலரின் வாழ்க்கை வரலாறுகள் இந்திய சினிமாவில் திரைப்படமாகியுள்ளன.

பெருந்தலைவர்களின் வாழ்க்கையை படமாக்குவதை விட சலசலசப்பை ஏற்படுத்திய கிரிமினல்கள், சர்ச்சையில் சிக்கியவர்களின் கதையைப் படமாக்குவதில்தான் நம்மவர்களுக்கு அலாதிப் பிரியம்.

அந்த வகையில் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாப் உல்மரின் வாழ்க்கை வரலாற்றை இந்திக்காரர்கள் படமாக்கவுள்ளனர்.

பிரபல இயக்குநர் மகேஷ்பட், உல்மரின் கதையைப் படமாக்கப் போகிறாராம். உல்மரின் வாழ்க்கை வரலாறாக இது இல்லாமல், உலகக் கோப்பைப் போட்டியின்போது நடந்த உல்மர் மர்மச் சாவு சம்பவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு படமாக்குகிறாராம்.

படத்தில் உல்மரின் பெயர் ஒரு இடத்தில் கூட வராது என்று கூறும் மகேஷ்பட், இந்தப் படம் உலகக் கோப்பை போட்டியின்போது ஏற்பட்ட சர்ச்சை மரணம் குறித்து மட்டுமே பேசும் என்று விளக்கியுள்ளார்.

அதேசமயம், படத்தில் அழகான காதலையும் ஒரு கதையாக பின்னியுள்ளாராம். சூதாட்டம், படுகொலை பிளஸ் காதல் பின்னணியுடன் கூடியதாக இந்தப் படம் அமையுமாம்.

அனுபம் கெர்தான் உல்மரா??

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil