»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் யானா குப்தா தமிழுக்கு வருகிறார் என்ற செய்தியால் கோலிவுட் நடிகைகள் கதிகலங்கியுள்ளனர்.

கிறங்கடிக்கும் கண்கள், வில் போன்ற உடல், அதிர வைக்கும் அழகு, கொஞ்சூண்டு துணி இது தான் யானா குப்தா (25). பிறப்பால் செக்கோஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்தவர் யானா குப்தா. 16 வயதில் மாடலிங் உலகில் நுழைந்தார். அதிரடியாக இவர் கொடுத்த நீச்சலுடை படம் மேன்ஸ் வேர்ல்ட் என்ற பத்திரிக்கையில் அட்டைப் படமாக வெளியாக, மாடலிங் உலகத்தின் பார்வை இவர் மீது விழுந்தது.

இதனையடுத்து மிலன், பாரீஸ், வியன்னா என்று பறந்து, பறந்து மாடலிங் செய்து கொண்டிருந்த இவர் இப்போது இந்தியாவில் இருப்பதற்குக் காரணம் காதல். ஒரு காபி ஷாபில் பார்த்ததுமே, சத்யா குப்தா என்ற புனேக்காரர் மீது காதல் வந்து விட்டது. அவரையே மணம் செய்து கொண்டு, புனேவில் வந்து செட்டிலாகிவிட்டார். இப்போது இங்கேயும் மாடலிங், நடிப்பு என்று பயங்கர பிஸி.

முதலில் கஷ்டப்பட்டு மந்த்ரா பேடியை தமிழுக்குக் கொண்டு வந்த சிம்பு, அடுத்து யானா குப்தாவையும் கொண்டு வந்து விட வேண்டும் என்று பிடிவாதமாக நின்று ஜெயித்துள்ளார். மந்த்ரா பேடி, யானா குப்தா என்ற இரண்டு செக்ஸ் பாம்களை சிம்பு கொண்டு வந்ததற்குக் காரணம் ஜோதிகா படத்தில் சரியாக ஒத்துழைக்காததுதான் என்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே சிம்புவுக்கும், ஜோதிகாவுக்கும் பிரச்சனை. ஒரு கட்டத்தில் படப்பிடிப்புக்கு ஜோதிகா மட்டம் போட ஆரம்பிக்க, தயாரிப்பாளர் சங்கத்துக்கு போய் புகார் கொடுப்போம் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் மிரட்டவே, கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார் ஜோதிகா.

ஆனாலும் அந்த டிரஸ் போட மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று பிகு செய்ய, இவரை டம்மியாக்க முடிவு செய்தனர் சிம்புவும், இயக்குனரும். அதனால்தான் மந்தரா பேடியையும், தொடர்ந்து யானா குப்தாவையும் புக் செய்தனராம்.

படத்தில் மொத்தம் 5 பாடல்களாம். ஆனால் கதாநாயகியான ஜோதிகாவுக்கு ஒரே ஒரு பாடல்தானாம். அது கூட பறிபோகலாம் என்று பேச்சு அடிபடுகிறது. எப்படியோ இவர்கள் அடிதடியில், மந்த்ராவும்,யானா குப்தாவும் தமிழ் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கப் போகிறார்கள்.

உங்கள் அழகின் ரகசியம் என்னவென்று யானா குப்தாவிடம் கேட்டால், நன்றாகச் சாப்பிடுவேன், நன்றாகத் தூங்குவேன், எதற்கும் டென்ஷனாக மாட்டேன் என்கிறார். தொளதொளவென்று உடம்பில் இருப்பதே தெரியாமல் இருக்கும் டிரஸ்களும், ஸ்கர்ட்சும் தான் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

இதைக் கேட்டு கோடம்பாக்கத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் ஆடும் ஏராளமான நடிகைகள் கலங்கிப் போயிருப்பதாகக் கேள்வி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil