»   »  நயனதாரா-தனுசின் 'யாரடி நீ மோகினி'

நயனதாரா-தனுசின் 'யாரடி நீ மோகினி'

Subscribe to Oneindia Tamil
Dhanush with Nayanatara
தனுஷ், நயனதாரா நடித்துள்ள யாரடி நீ மோகினி, பிப்ரவரி 14ம்தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது.

தெலுங்கில் செல்வராகவன் இயக்கி பெரும் வெற்றி பெற்ற அடவரி மடலகு அர்த்தலே வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. செல்வாவின் உதவியாளரான ஜவஹர்தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க, அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயனதாரா. இது தனுஷின் குடும்பப் படம் - அதாவது அவரது குடும்பத்தின் தயாரிப்பு.

பொல்லாதவன் வெற்றிக்குப் பின்னர் வெளியாகும் தனுஷ் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல பில்லாவுக்குப் பிறகு நயனதாரா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், பாடல்கள் இன்னிசை கற்கண்டுகளாக வந்துள்ளனவாம்.

குடும்ப சென்டிமென்ட், ரொமான்ஸ், காமெடி, அதிரடி என அனைத்தையும் சரி விகிதமாக கலந்து கொடுத்துள்ளாராம் ஜவஹர்.

இதுபோன்ற வித்தியாசமான கலவையில் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் ஆகியவை வெற்றி பெற்றன. எனவே யாரடி நீ மோகினியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தனுஷ் தரப்பு உள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil