நான் முன்ன மாதிரி இல்ல... இப்போ அப்டேட் ஆயிட்டேன்னு ஹரி சொன்னாரு.. நடிகை பிரியா பவானி சங்கர்!
சென்னை : சின்னத்திரையிலிருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை பவானி சங்கர்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் யானை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்
இந்த நிலையில் யானை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரியா பவானி சங்கர் ஹரி சார் அப்டேட் ஆயிட்டேன் முன்ன மாதிரி கிடையாது என கூறியதாக பேசியுள்ளார்.

சின்னத்திரையில் சீரியல்களில்
இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களை வென்ற இவர் ஏற்கனவே சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டவர். இப்பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டு உள்ளார். மேயாதமான் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில் அதைத் தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் .

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில்
முன்னணி ஹீரோக்கள் இளம் ஹீரோக்கள் என அனைவரது படங்களிலும் பாரபட்சம் பார்க்காமல் நடித்து வரும் பிரியா பவானி சங்கர்
இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து வருவதால் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இப்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார்.

யானை
அருண் விஜய் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிக முக்கிய ஆக்சன் ஹீரோவாக முன்னேறி வருகிறார் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்று வருகிறது அந்த அளவுக்கு மிகச் சிறந்த கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் இப்போது முதன் முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார், ல். ஹரி மற்றும் அருண் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இன்று வரை இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்த நிலையில் முதல் முறையாக இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது பொதுவாக இயக்குனர் ஹரியின் திரைப்படங்கள் என்றாலே அதிரடி சண்டைக்காட்சிகள் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத் துவம் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் மசாலா படமாக வெளியாகும்.

குத்துப்பாட்டு எப்போது ஹரியிடம் பிரியா கேட்ட கேள்வி
விறுவிறுப்பான திரைக்கதையுடன் ஹரி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் வெற்றி பெற்று மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்று வருகிறது. பொதுவாக ஹரியின் திரைப்படங்களில் 1,2 பாடல்கள் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்படும். அப்படி யானை படத்திலும் செட் அமைக்கப்பட்டு ஒரு குத்து பாடலை ஹரி வைப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர் ஹரியிடம் அந்த பாடல் எப்போது வரும் என கேட்டுள்ளார். அந்த மாதிரி பாட்டு எல்லாம் இந்த படத்தில் கிடையாதுமா நான் அப்டேட் ஆகி விட்டேன் என கூறினாராம்.


Click it and Unblock the Notifications











