For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரே படத்தில் இளம் பெண்களின் ஃபேவரைட் ஹீரோவான துருவ்...பிறந்த நாள் ஸ்பெஷல்

  |

  சென்னை : நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தனது முதல் படத்திலேயே இளம் பெண்களின் மனதை கவர்ந்து, ஃபேவரைட் நடிகராகி விட்டார். இவரது இரண்டாவது படம் வெளிவருவதற்கு முன்பே பயங்கர ஃபேமஸ் ஆகி விட்டார்.

  Young girls favourite young hero Dhuruv Vikrams birthday special

  இதற்கு காரணம் அவர் முன்னணி நடிகர் என்பது மட்டுமல் காரணமல்ல. முதல் படத்திலேயே தனது யதார்த்தமான நடிப்பை, லவ் பாய் முகத்தை காட்டியது தான். அடுத்தடுத்த படங்களிலும் புக் ஆகி வருகிறார் துருவ். துருவ்வின் அப்பா விக்ரம் மட்டுமல்ல அவரின் தாத்தா வினோத் ராஜும் நடிகர் தான். கில்லி, சிவகாசி, கந்தசாமி உள்ளிட்ட சில படங்களில் அப்பா ரோல்களில் நடித்துள்ளார்.

  2004 ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஜெயம் ரவி நடித்த ரோல்களில் நடிக்க முதலில் துருவ் விக்கிரமிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால் அப்போது தனக்கு நடிக்க விருப்பமில்லை என கூறி விட்டார் துருவ். அதற்கு பிறகு 2008 ல் பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்திலும் அன்புக்கரசு ரோலில் நடிக்க துருவ்விடம் தான் கேட்கப்பட்டது. அப்போது விக்ரம், தனது மகனை நடிப்பில் கொண்டு வர விரும்பவில்லை.

  அந்த ஹாலிவுட் நடிகர் மேல எனக்கு செம க்ரஷ்.. ஜொள்ளு விட்டுருக்கேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்! அந்த ஹாலிவுட் நடிகர் மேல எனக்கு செம க்ரஷ்.. ஜொள்ளு விட்டுருக்கேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்!

  அதே சமயம், குட்நைட் சார்லி என்ற குறும்படத்தை இயக்கிய துருவ், 2016 ல் அதனை யூட்யூப்பில் ரிலீஸ் செய்தார். இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை பற்றியதாகும். இந்த படம் ஓரளவிற்கு பேசப்பட்டதை அடுத்து, 2017 ல் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படம் முடிவடையும் சமயத்தில் கை விடப்பட்டது.

  பிறகு இதே படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் பாலாவின் அசிஸ்டென்ட் கிரிசய்யா இயக்கி முடித்தார். இந்த படத்தில் துருவ்வின் நடிப்பு பாராட்டப்பட்டது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பை அப்படியே உள்வாங்கி, கேரக்டராக மாறி நடித்திருந்தார் துருவ். இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் விக்ரமின் 60 வது படமான மகான் படத்தில் தனது அப்பாவுடன் சேர்ந்து நடித்து வருகிறார் துருவ். இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க துருவ் கமிட் ஆகி உள்ளார். இது கபடியை மையமாகக் கொண்ட படம் என கூறப்படுகிறது.

  2020 ல் வர்மா படம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது. ஆதித்ய வர்மா படத்திற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான ஆனந்த விகடன், ஜீ சினி போன்ற விருதுகளை துருவ் பெற்றார். வளர்ந்து வரும் நடிகரான துருவ் இன்று தனது 25 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விக்ரம் ரசிகர்களும் துருவ்வின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

  துருவ், அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்கும் முதல் படமான மகான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சூறையாட்டம் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. செம மாஸான இந்த பாடல் படு வைரலாகி வருகிறது. அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் இந்த பாடல் ரிலீஸ் செய்யப்பட்ட அடுத்த நாளே துருவ்வின் பிறந்தநாள் வந்துள்ளதால், ரசிகர்கள் இதை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

  English summary
  Today Vikram's son Dhuruv vikram celebrates his 25 th birthday.his fans and vikram's fans also shared their wishes in social media. yesterday vikram-dhuruv vikram duo starring mahaan movie first single released.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X