»   »  கோடியை தொட்ட யுவன்ஷங்கர்

கோடியை தொட்ட யுவன்ஷங்கர்

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் இளைய புதல்வன் யுவன் ஷங்கர் ராஜா ஒரு கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இப்போது நிறைய இசையமைப்பாளர்கள். ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு போல இசையமைப்பதில்லை என்பதால் வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ் என அத்தனை பேருக்கும் சம அளவில் வாய்ப்புகள் குவிகின்றன.

இருப்பினும் இப்போது உள்ள இசையமைப்பாளர்களில் யுவன்தான் முன்னணியில் இருக்கிறார். இவரது இசைக்காக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டிக் காத்துக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.

தனது இசைக்கு டிமாண்ட் அதிகம் இருப்பதை உணர்ந்த யுவன் தனது சம்பளத்தை தற்போது 1 கோடியாக உயர்த்தி விட்டாராம். முன்பு கோடியில் சம்பளம் வாங்கிய இசையமைப்பாளராக ரஹ்மான் மட்டுமே இருந்து வந்தார். இப்போது அவருடன் யுவனும் சேர்ந்துள்ளார்.

இளம் நடிகர்கள் சிலரின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறி வருகிறார் யுவன். யுவன் இசையில் தனது படங்களுக்கு புது உருவம் கிடைப்பதால் யுவனையே தனது படங்களின் இசையமைப்பாளராக பரிந்துரைக்கிறாராம் சிம்பு.

இதேபோல மேலும் சில இளம் நடிகர்களும் கூட யுவனையே விரும்புகின்றனராம்.

யுவன் சம்பளத்தை ஏற்றியதைக் கேள்விப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ் தனது சம்பளத்தை முக்கால்கோடிக்கு உயர்த்தி விட்டாராம்.

காமெடியான விஷயம் என்னவென்றால் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 50 லட்சம் சம்பளம் கேட்பதுதான். அதை விட கொடுமை, பெரிய ரேஞ்சுக்கு பேசவும் செய்கிறாராம் பிரகாஷ். நான் அடிப்பதுதான் இசை, மற்றதெல்லாம் ச்சும்மா என்று மற்ற இசையமைப்பாளர்களை கிண்டல் செய்து பேசுகிறாராம்.

பிரகாஷ் பேசும் பேச்சுக்கு சீக்கிரமே அவரை கோலிவுட் ஏறக்கட்டி விடும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் முனுமுனுக்கப்படுகிறதாம். பிரகாஷ் வேறு யாரும் இல்லை, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காள் மகன்தான்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil