»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா முன்னணி இசையமைப்பாளர் ரேஞ்சுக்குஉயர்ந்து வருகிறார்.

தற்போதைய கோலிவுட் இசையமைப்பாளர்கள் வட்டாரத்தில் வித்யாசாகருக்கு அடுத்த இடத்தில் யுவன் தான்இருக்கிறார். வித்யாசகரின் பாடல்கள் வெற்றி பெற்றாலும் பின்னணி இசையில் அவர் பிரகாசிக்கவில்லை.

ஆனால். யுவன் பாடல்களில் மட்டுமல்லாது, பின்னணி இசையிலும் கலக்குவதாக பெயர் வாங்கியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தில், பாடல்களில் மட்டுமல்லாது, பின்னணி இசையிலும்பயமுறுத்தி இருகிறார்.யுவன். இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகள், சிடிக்கள் விற்பனையில் சக்கைபோடு போட்டுவருகின்றன.

புன்னகைப் பூவே படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்போது காதல் கொண்டேன்பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் யுவனின் மீதான கவனம் கோலிவுட்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கலைப்புலி தாணு உள்பட பல தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படங்களுக்கு யுவனிடம் அட்வான்ஸ்கொடுத்துள்ளனர்.

இதே லெவலில் போனால் இன்னும் சில படங்களில் நம்பர் ஒன் இடத்தை யுவன் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லைஎன்கிறார்கள்.

தந்தையின் திறமை, வேகம், கவனம் ஆகியவை யுவனிடமும் நிறைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

Please Wait while comments are loading...