For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இசைக்கடலில் நீந்தி வந்த யுவனுக்கு இன்று 39வது பிறந்த நாள்

  |

  சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

  இளையராஜா கோலோச்சிய காலகட்டங்களில் ஏஆர்.ரகுமான் வந்தபோது மண்ணின் இசையை புதிய சப்தங்களின் மூலம் தடம் மாற்றினார். ராஜா என்ற சக்ரவர்த்தி இசையாட்சி செய்யும்போது ரகுமான் அதைச் செய்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டதே மிகப்பெரிய சாதனை தான். ஆனால் பெரிதாக திட்டம் ஏதுமில்லாமல் நான் இசையமைக்கிறேன் என்று விளையாட்டுத் தனமாக களமிறங்கிய யுவன் ஷங்கர் ராஜா தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு இசைச் சிற்பியானார். இயக்குனர்களின் இசையமைப்பாளரானார்.

  Yuvan Shankar Raja Birthday Special!

  செல்வராகவன் படத்திற்கு ஒரு பாணி, ராம் திரைப்படத்திற்கு ஒரு பாணி, அமீர் என்றால் ஒரு பாணி என தனி இலக்கணம் வகுத்துக் கொண்டார். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி அது யுவன் இசை என கேட்டவுடன் கணிக்கக் கூடிய டச் அவரது இசையில் இருக்கிறது. இது எல்லோராலும் முடியாத காரியம். இயக்குனர்களுக்காக இசையை புனரமைக்க முயற்சிக்கும்போது இசையமைப்பாளர்களின் தனித் தன்மை சிதைவுற வாய்ப்புகள் உண்டு. அதில் பலியாகாமல் தப்பிப் பிழைப்பதே யுவனின் தனித்தன்மை.

  தன்னை மிகப்பெரிய இசையமைப்பாளரின் மகன் என்று அறிமுகம் செய்துகொள்ள அவர் விரும்பியதில்லை. இளையராஜாவும் யுவனை தூக்கி விடவேண்டுமென்று நினைத்ததில்லை. உன்னைப் பற்றி நான் புகழ்ந்து பேசமாட்டேன், உன் இசை உன்னைப் பேச வைக்க வேண்டும். இசை ஒரு கடல் நீ தான் நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். திறமை இருந்தால் முன்னுக்கு வா... என சொல்லியிருக்கிறார் இளையராஜா. தந்தையின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்டு முன்னேறிக் காட்டியவர் யுவன் ஷங்கர் ராஜா.

  எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள், சென்றுவிட்டார்கள். ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக யுவன் மென்மேலும் மெருகேறிக் கொண்டே வருகிறார். தனக்கென இருக்கும் ரசிகர்களுக்கென ஏதோ செய்கிறார். நள்ளிரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்கும்போது தூரத்திலிருந்து அமைதியாக ஒளிதரும் நிலவைப்போல் நிற்கிறார். இவற்றுக்கெல்லாம் காரணம் அவர் பல விஷயங்களில் இளையராஜாவை பின் தொடர்வது தான். இளையராஜாவைப் போல் தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத தன்மை இவரிடம் உள்ளது. வாய்ப்புக் கிடைக்கும்போது பிழைத்துக்கொள்பவன் புத்திசாலி என்பதை உணர்ந்தவர் யுவன். பெரிய நடிகர்களின் படங்களுக்கு பணியாற்றும்போது கூட சிறிய படங்களுக்கு இசையமைக்க தவறியதில்லை. பில்லா 2 திரைப்படத்திற்கு இசையமைத்தபோது புதுமுக நடிகரின் ஆதலால் காதல் செய்வீர் படத்திற்கும் இசையமைத்தார். அது தான் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைக்க காரணம். இளையராஜாவைப் போலவே படத்தின் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்துபவர். தீம் மியூசிக் என்ற பாணி யுவனின் படங்களில் அதிகமாக கொண்டாடப்படுகிறது. இவர் போட்ட தீம் ம்யூசிக், பின்னணி இசையைக் கொண்டே பல பாடல்களை உருவாக்கலாம்.

  யுவன் எப்போதும் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டது கிடையாது. இவர் ரொம்ப மாடர்ன் பாடல்களில் வெஸ்டெர்ன் டச் இருக்கும் என சொல்பவர்களுக்கு பருத்தி வீரன் மூலம் பதில் சொன்னார். பில்லா போன்ற மாஸ் ஸ்டைலிஷ் படங்களுக்கு இசையமைக்கும் யுவனால் ஊரோரம் புளியமரம் ... என நாட்டார் இசையிலும் பாடல் தர முடியும் என காண்பித்தார். இப்படி டெம்ப்லேட்களில் சிக்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு டெம்ப்லேட்களிலும் ட்ரென்ட் செட் செய்து வெர்சட்டைலாக இருப்பதே இத்தனையாண்டுகளாய் யுவன் கொண்டாடப்படுவதற்கு காரணம்.

  யுவனின் இசை தனித்துவமானது என்றால் அவரின் குரலும் அப்படியே. இவரின் இசை ஆராரிராரோ... பாடலில் தாய்மையைப் போற்றியது. ஆனந்த யாழில்... மகள் மீதுள்ள தகப்பனின் அன்பை பறைசாற்றியது. வெண்மேகம் பெண்ணாக உருவானதோ... பாடலில், அழகின் பிரம்மிப்பை உணர்த்தியது. ஒருகல் ஒரு கண்ணாடியில்... காதலை சேமித்தது. போகாதே... பாடலில் பிரிவின் வலிக்கு கூக்குரலிட்டது. பருத்திவீரனின் ஐயயோ... பாடலில் காதலின் ஆனந்தத்திற்கு அழகூட்டியது. என் நண்பனே... பாடலில் நம்பிக்கை துரோகத்தை தோலுரித்தது. இப்படி எல்லா தருணங்களிலும், எல்லா உணர்வுகளையும் யுவனின் இசை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. காலமாற்றத்தில் கரைந்துபோகாமல் அது நீட்சியடைந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவன்..!

  English summary
  Yuvan Shankar Raja celebrates his 39th birthday today. He has been celebrated as one of the successful composer in South Indian cinema for more than 20 years.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more